`மோதல்கள் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன..!' - உக்ரைனில் பிரதமர் மோடி
போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நேற்று போலந்தில் பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ரயிலில் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.В Києві вшанували пам'ять Махатми Ганді. Ідеали Бапу універсальні і дають надію мільйонам. Хай усі ми йдемо шляхом, який він показав людству. pic.twitter.com/4tTfQSrFIx— Narendra Modi (@narendramodi) August 23, 2024 இன்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் வந்திறங்கிய மோடி, அங்குள்ள ஏவி ஃபோமின் தாவரவியல் பூங்காவில் கடந்த 2020-ல் மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு நிறுவப்பட்ட வெண்கல சிலைக்கு மலர் தூவி மரியாதையைச் செலுத்தினார்.மோடி - ஜெலன்ஸ்கிஅதையடுத்து, கீவிலுள்ள உக்ரைன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் மோடியை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். அங்கு, ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மோடியும், ஜெலன்ஸ்கி மரியாதைச் செலுத்தினர்.இது குறித்து ஜெலன்ஸ்கி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மோடியும் நானும் மரியாதை செலுத்தினோம். ஒவ்வொரு நாட்டிலும் குழந்தைகள் பாதுகாப்பாக வாழத் தகுதியுடையவர்கள். அதை நாம் சாத்தியப்படுத்த வேண்டும்" என்று ட்வீட் செய்திருந்தார்.Today in Kyiv, Prime Minister @NarendraModi and I honored the memory of the children whose lives were taken by Russian aggression.Children in every country deserve to live in safety. We must make this possible. pic.twitter.com/gKdjqcL5iz— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 23, 2024 மேலும், இது குறித்து மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `மோதல்கள் குழந்தைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்துகின்றன. இந்நேரத்தில், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களிடம் என் இதயம் செல்கிறது. அவர்களுக்கு, இந்த வலியைத் தாங்கிக்கொள்ளும் வலிமை கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்' என்று ட்வீட் செய்திருக்கிறார்.#WATCH | Prime Minister Narendra Modi welcomed by Ukrainian President Volodymyr Zelenskyy at his official residence, Mariinsky Palace in Kyiv. (Video: ANI/DD News) pic.twitter.com/pek9zMSp4x— ANI (@ANI) August 23, 2024 அங்கிருந்து இருவரும் கிளம்பியதையடுத்து, உக்ரைன் அதிபர் மாளிகையில் மோடியை ஜெலன்ஸ்கி வரவேற்றார். அங்கு, இரு தரப்பினரின் பேச்சுவார்த்தையில் வேளாண்மை, மருத்துவம், கலாசாரம், மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றில் இந்தியா - உக்ரைன் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88Poland To Ukraine: விமானத்துக்குப் பதில், 20 மணிநேரம் ரயிலில் செல்லும் மோடி... காரணம் என்ன? | Modi
போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நேற்று போலந்தில் பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ரயிலில் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.
இன்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் வந்திறங்கிய மோடி, அங்குள்ள ஏவி ஃபோமின் தாவரவியல் பூங்காவில் கடந்த 2020-ல் மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு நிறுவப்பட்ட வெண்கல சிலைக்கு மலர் தூவி மரியாதையைச் செலுத்தினார்.
அதையடுத்து, கீவிலுள்ள உக்ரைன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் மோடியை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். அங்கு, ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மோடியும், ஜெலன்ஸ்கி மரியாதைச் செலுத்தினர்.
இது குறித்து ஜெலன்ஸ்கி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மோடியும் நானும் மரியாதை செலுத்தினோம். ஒவ்வொரு நாட்டிலும் குழந்தைகள் பாதுகாப்பாக வாழத் தகுதியுடையவர்கள். அதை நாம் சாத்தியப்படுத்த வேண்டும்" என்று ட்வீட் செய்திருந்தார்.
மேலும், இது குறித்து மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `மோதல்கள் குழந்தைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்துகின்றன. இந்நேரத்தில், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களிடம் என் இதயம் செல்கிறது. அவர்களுக்கு, இந்த வலியைத் தாங்கிக்கொள்ளும் வலிமை கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்' என்று ட்வீட் செய்திருக்கிறார்.
அங்கிருந்து இருவரும் கிளம்பியதையடுத்து, உக்ரைன் அதிபர் மாளிகையில் மோடியை ஜெலன்ஸ்கி வரவேற்றார். அங்கு, இரு தரப்பினரின் பேச்சுவார்த்தையில் வேளாண்மை, மருத்துவம், கலாசாரம், மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றில் இந்தியா - உக்ரைன் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?