``மய்யம் என்பது அசையாமல் இருப்பதல்ல சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது" - சினேகன் கூறுவதென்ன?
'மய்யம் என்பது அசையாமல் இருப்பதல்ல சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது' என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவரான சினேகன் கருத்து தெரிவித்திருக்கிறார்.சதீஷ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் 'சட்டம் என் கையில்'. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கி இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி பிரபலங்களுக்கு திரையிடப்பட்டிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்Kamal Haasan: “நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி...” - கலங்கிய கமல் ஹாசன்; பின்னணி என்ன?அதில் கலந்துகொண்ட கவிஞரும், மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவரான சினேகனிடம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன் அவராகவே தன்னிசையாகச் செயல்படுகிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகிறது. இதற்கு உங்களின் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த சினேகன், " சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி எப்போதும் பொதுக்குழு, நிர்வாகக்குழுவை கூட்டிதான் எங்கள் தலைவர் முடிவெடுப்பார். எங்கள் அனைவரையும் கைக்கோர்த்து கொண்டுதான் அவர் அனைத்து பணிகளையும் செய்கிறார். அவர் தன்னிசையாக இயங்குகிற ஆள் கிடையாது என்பது உங்களுக்கே தெரியும். திரையாக இருந்தாலும் சரி தரையாக இருந்தாலும் சரி அவர் அனைவருடனும் இணைந்துதான் பணியாற்றுவார். தன்னிசையாகத்தான் அவர் செயல்படுகிறார் என்று தகவல் பரவினால் அது தவறான கருத்து. சினேகன்மய்யம் என்பது அசையாமல் இருப்பது அல்ல. சூழலுக்கு ஏற்றவாறு, பிரச்னைக்கு தகுந்தவாறு மக்கள் நலன் கருதி முடிவெடுப்பதுதான் மய்யம். மக்கள் நலன் கருதி யாரு நடுநிலைமையாக முடிவெடுக்கிறார்களோ அதுதான் மய்யம். அதைதான் நாங்கள் செய்துவருகிறோம்" என்று கூறியிருக்கிறார்.பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி... காசா குறித்துப் பேசியது என்ன?
'மய்யம் என்பது அசையாமல் இருப்பதல்ல சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது' என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவரான சினேகன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
சதீஷ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் 'சட்டம் என் கையில்'. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கி இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி பிரபலங்களுக்கு திரையிடப்பட்டிருக்கிறது.
அதில் கலந்துகொண்ட கவிஞரும், மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவரான சினேகனிடம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன் அவராகவே தன்னிசையாகச் செயல்படுகிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகிறது. இதற்கு உங்களின் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த சினேகன், " சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி எப்போதும் பொதுக்குழு, நிர்வாகக்குழுவை கூட்டிதான் எங்கள் தலைவர் முடிவெடுப்பார்.
எங்கள் அனைவரையும் கைக்கோர்த்து கொண்டுதான் அவர் அனைத்து பணிகளையும் செய்கிறார். அவர் தன்னிசையாக இயங்குகிற ஆள் கிடையாது என்பது உங்களுக்கே தெரியும். திரையாக இருந்தாலும் சரி தரையாக இருந்தாலும் சரி அவர் அனைவருடனும் இணைந்துதான் பணியாற்றுவார். தன்னிசையாகத்தான் அவர் செயல்படுகிறார் என்று தகவல் பரவினால் அது தவறான கருத்து.
மய்யம் என்பது அசையாமல் இருப்பது அல்ல. சூழலுக்கு ஏற்றவாறு, பிரச்னைக்கு தகுந்தவாறு மக்கள் நலன் கருதி முடிவெடுப்பதுதான் மய்யம். மக்கள் நலன் கருதி யாரு நடுநிலைமையாக முடிவெடுக்கிறார்களோ அதுதான் மய்யம். அதைதான் நாங்கள் செய்துவருகிறோம்" என்று கூறியிருக்கிறார்.
What's Your Reaction?