``மது ஒழிப்பு மாநாடு ஒரு 'ஸ்கிரிப்ட்' நாடகம்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!
விருதுநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று விருதுநகர் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டையும், அதற்காக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து பேசுபொருளாக்கியதையும் நாடகமாகத்தான் பார்க்கிறேன். முதல்வர் வெளிநாட்டில் 17 நாள்கள் இருந்தார். எதிர்பார்த்த அளவு முதலீடுகள் வரவில்லை. அதை திசைத்திருப்ப முதல்வர் ஸ்டாலின், திருமாவளவனிடம் இந்த நாடகத்தை அரங்கேற்றுங்கள் என்று கூறியிருப்பதுபோல், மதுஒழிப்பு மாநாடு பற்றிய பேச்சுகள் உள்ளது. இந்த அரசு 2026 தேர்தலை எதிர்நோக்கி உள்ளது.அமைச்சர் எல்.முருகன்மக்களை திசைத்திருப்பும் விதமாக இருவரும் சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதி தயாரித்த நாடகம்தான் மது ஒழிப்பு மாநாடு. திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறார். மது ஒழிப்பை அவர் சாத்தியப்படுத்த வைக்கவேண்டும். எங்கள் குஜராத் ஆட்சியில் மதுவிலக்கு கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டுமென்பதுதான் ஒவ்வொருவரின் விருப்பம். ஆனால், இந்த நாடகம் மக்களை ஏமாற்றும் ஒன்று. இந்த ஆட்சியில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தியதோடு மனமகிழ் மன்றங்களை அதிகப்படுத்தி உள்ளனர். கிராமத்தில் பள்ளிக்கூடம்கூட இல்லாத சூழலில் டாஸ்மாக் மட்டும் உள்ளது.பேட்டிஇந்த டாஸ்மாக் கடைக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தார் தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தில் சிறந்த முறையில் பயணிப்பவர். புதிய செய்தி ஒளிபரப்பு திருத்தச் சட்டம் குறித்து மக்களுக்கு கருத்துகளை வழங்கிஉள்ளோம். ஆற்றல் மிக்கதாக செய்ய முடிவெடுத்துள்ளோம். அரசுக்கு, தேசத்திற்கு, ராணுவத்திற்கு எதிராக ஒருவர் பேசுவதை பார்த்து கொண்டிருக்க முடியாது. அடிப்படை கருத்து சுதந்திரம் இருந்தாலும்கூட நாட்டின் நலனில் எந்த சமரசமும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருப்பதை விரும்புவது போலத்தான் அவருடைய பேச்சு உள்ளது" என்றார்.தொடர்ந்து, குமாரபுரம் இந்திராநகர் பகுதியில் பட்டியலின மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்த அவர், தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்திருப்பதையும், அங்கு வசிக்கும் மக்களுக்கு நிறைவேற்றி தரப்படாத அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்திராநகர் பகுதியில் சுகாதார வளாகத்தை பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் தண்ணீர் மற்றும் மின்சார வசதி இன்றி பயனற்று கிடப்பது குறித்து கோட்டாட்சியர் சிவகுமாரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, 'விரைவில் நடவடிக்கை எடுத்து மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்'. அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பணியை சரிவர செய்து முடிக்காத இதுபோன்ற வேலை ஒப்பந்ததாரர்களை கறுப்பு பட்டியலில் வைத்ததால் என்ன? என கேள்வியெழுப்பியது குறிப்பிடத்தக்கது.``அமைச்சர் உதயநிதியவே முதல்வராக அறிவிச்சிடுங்க' - ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ சாடல்
விருதுநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று விருதுநகர் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டையும், அதற்காக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து பேசுபொருளாக்கியதையும் நாடகமாகத்தான் பார்க்கிறேன். முதல்வர் வெளிநாட்டில் 17 நாள்கள் இருந்தார். எதிர்பார்த்த அளவு முதலீடுகள் வரவில்லை. அதை திசைத்திருப்ப முதல்வர் ஸ்டாலின், திருமாவளவனிடம் இந்த நாடகத்தை அரங்கேற்றுங்கள் என்று கூறியிருப்பதுபோல், மதுஒழிப்பு மாநாடு பற்றிய பேச்சுகள் உள்ளது. இந்த அரசு 2026 தேர்தலை எதிர்நோக்கி உள்ளது.
மக்களை திசைத்திருப்பும் விதமாக இருவரும் சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதி தயாரித்த நாடகம்தான் மது ஒழிப்பு மாநாடு. திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறார். மது ஒழிப்பை அவர் சாத்தியப்படுத்த வைக்கவேண்டும். எங்கள் குஜராத் ஆட்சியில் மதுவிலக்கு கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டுமென்பதுதான் ஒவ்வொருவரின் விருப்பம். ஆனால், இந்த நாடகம் மக்களை ஏமாற்றும் ஒன்று. இந்த ஆட்சியில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தியதோடு மனமகிழ் மன்றங்களை அதிகப்படுத்தி உள்ளனர். கிராமத்தில் பள்ளிக்கூடம்கூட இல்லாத சூழலில் டாஸ்மாக் மட்டும் உள்ளது.
இந்த டாஸ்மாக் கடைக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தார் தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தில் சிறந்த முறையில் பயணிப்பவர். புதிய செய்தி ஒளிபரப்பு திருத்தச் சட்டம் குறித்து மக்களுக்கு கருத்துகளை வழங்கிஉள்ளோம். ஆற்றல் மிக்கதாக செய்ய முடிவெடுத்துள்ளோம். அரசுக்கு, தேசத்திற்கு, ராணுவத்திற்கு எதிராக ஒருவர் பேசுவதை பார்த்து கொண்டிருக்க முடியாது. அடிப்படை கருத்து சுதந்திரம் இருந்தாலும்கூட நாட்டின் நலனில் எந்த சமரசமும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருப்பதை விரும்புவது போலத்தான் அவருடைய பேச்சு உள்ளது" என்றார்.
தொடர்ந்து, குமாரபுரம் இந்திராநகர் பகுதியில் பட்டியலின மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்த அவர், தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்திருப்பதையும், அங்கு வசிக்கும் மக்களுக்கு நிறைவேற்றி தரப்படாத அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்திராநகர் பகுதியில் சுகாதார வளாகத்தை பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் தண்ணீர் மற்றும் மின்சார வசதி இன்றி பயனற்று கிடப்பது குறித்து கோட்டாட்சியர் சிவகுமாரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, 'விரைவில் நடவடிக்கை எடுத்து மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்'. அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பணியை சரிவர செய்து முடிக்காத இதுபோன்ற வேலை ஒப்பந்ததாரர்களை கறுப்பு பட்டியலில் வைத்ததால் என்ன? என கேள்வியெழுப்பியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?