பவதாரிணியின் குரலில் ‘தி கோட்’ பாடல்: ஏஐ மூலம் சாத்தியமானது எப்படி?
விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதில் மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ மூலம் உயிரூட்டப்பட்டுள்ளது. இது சாத்தியமானது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.
சென்னை: விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதில் மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ மூலம் உயிரூட்டப்பட்டுள்ளது. இது சாத்தியமானது எப்படி என்பது குறித்து தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68-வது படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் அண்மையில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் பாடலில் மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்தார்.
What's Your Reaction?