பரிசும் தண்டனையும்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான வழக்கு கவனம் பெறுவது ஏன்?
எஸ்.ஈஸ்வரன் மீதான முறைகேடு குற்றச்சாட்டுதமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதான முறைகேடு புகாரை அந்நாட்டு உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பணியில் இருக்கும் அரசு ஊழியர்களோ, அதிகாரிகளோ அலுவல்ரீதியாக தொடர்பில் இருக்கும் ஒருவரிடமிருந்து பொருட்களையோ அல்லது பணமோ பெறுவது சிங்கப்பூர் தண்டனைச் சட்டம் 165 பிரிவின் கீழ் குற்றமாகும். 65 வயதாகும் ஈஸ்வரன் இந்தச் சட்டத்தை மீறியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக லஞ்சம் - ஊழல் சார்ந்த வழக்கு பதியப்படுவது இதுவே முதல் முறை என்பதால் இந்த வழக்கு கவனம் பெறுகிறது. சிங்கப்பூரில் ஆளும் பீப்பிள்ஸ் ஆக்ஷன் கட்சி கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தனது குடிமக்களின் முன்னேற்றத்தில் பலவகைகளில் கவனம் செலுத்தியதன் மூலம் அந்நாட்டு மக்களிடையே நற்பெயரை கட்டியெழுப்பியுள்ளது. ஒரு நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாவது கட்சி என்ற பெருமையை பெற்றது அக்கட்சி. இத்தனை ஆண்டுகள் கட்டிக் காத்த நற்பெயரை ஆட்டம் காண வைத்தது சமீபத்தில் அக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தவருமான எஸ்.ஈஸ்வரன் மீதான முறைகேடு குற்றச்சாட்டு.பரிசுகளால் வந்த வினை1962-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஈஸ்வரன்,1997-ஆம் ஆண்டு முதன் முதலில் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004 முதல் 2006 வரை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக பதவி வகித்தார். 2018-ஆம் ஆண்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சராக பதவியேற்ற ஈஸ்வரன், பின்னர் வர்த்தக உறவுகளுக்கான அமைச்சராகவும் தொடர்ந்தார். 2021-ஆம் ஆண்டு அவருக்கு கூடுதலாக போக்குவரத்துத் துறை அமைச்சராகவுன் பொறுப்பு வழங்கப்பட்டது.சிங்கப்பூரில் ஃபார்முலா ஒன் (F1) இரவுப் பந்தயத்தை கொண்டு வந்ததற்காக மிகவும் பாராட்டப்பட்டார் ஈஸ்வரன். இந்த ஃபார்முலா ஒன் பந்தயத்துக்காக கோடீஸ்வரர் ஓங் பெங் செங் மற்றும் லம் சாங் ஹோல்டிங்ஸின் இயக்குநர், டேவிட் லம் ஆகிய தொழிலதிபர்களிடமிருந்து 4,00,000 சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள பரிசுகளைப் பெற்றதாக ஈஸ்வரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஈஸ்வரன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின் வழிநடத்தல் குழுவின் ஆலோசகராக ஈஸ்வரன் இருந்த காலகட்டத்தில், கார் பந்தயத்துக்கான உரிமையை வைத்திருந்தவர் ஓங் பெங் செங். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈஸ்வரன் கைது செய்யப்பட்ட சமயத்தில் அவருடன் ஓங் பெங் செங்கும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை. அதேபோல வர்த்தக உறவுகள் துறை அமைச்சராக இருந்த ஈஸ்வரன், ஒரு ரயில்வே நிலையத்தின் கட்டுமான பணிகளுக்கான பொறுப்பை ஏற்றிருந்த லம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் டேவிட் லம் இடமிருந்து ஏராளமான பரிசுப் பொருட்களை பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.இதன் பிறகு சில நாள்களிலேயே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஈஸ்வரன், கட்சிப் பொறுப்பை மட்டுமின்றி அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும், தன் மீது விழுந்த களங்கத்தை விரைவில் துடைத்தெறிவேன் என்றும் உறுதி பூண்டார்.எனினும், தன் மீது முன்வைக்கப்பட்ட 35 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஈஸ்வரன். சிங்கப்பூரில் இதுபோன்ற குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். எனினும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறைந்தபட்ச தண்டனையாக ஆறு முதல் ஏழு மாத சிறைத் தண்டனையை ஈஸ்வரனுக்கு பரிந்துரைத்துள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 3-ஆம் தேதி இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.ஈஸ்வரனின் வழக்கு விசாரணை இந்த மாத தொடக்கத்திலேயே திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் செப்.24 வரை தாமதமானது. அவரின் சட்டக் குழுவை ஆளும் பிஏபி கட்சியின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டேவிந்தர் சிங் வழிநடத்தினார். ஈஸ்வரனின் மனைவி உட்பட 56 சாட்சிகளை அரசு தரப்பு பட்டியலிட்டிருந்தது.அதிமுக்கியத்துவம் ஏன்?1986-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தேசிய வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த டெஹ் சியாங் வான், அரசு நிலத்தை விற்பனை செய்வதற்கு இரண்டு நிறுவனங்களிடம் இருந்து $1 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பின்னர் தற்கொலை செய்து கொண்டார். உலகில் அதிகம் சம்பளம் பெறும் அரசியல்வாதிகளில் சிங்கப்பூர் அமைச்சர்களும் அடக்கம். அவர்களுக்கு மாதம் 46,750 சிங்கப்பூர் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஊழலை தடுக்க அரசு பதவியில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளம் அவசியம் என்பது அந்நாட்டு அரசின் கொள்கையாக உள்ளது. இதனால் ஊழல் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கையையும் சிங்கப்பூர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே உலகின் ஐந்தாவது ஊழல் குறைந்த நாடாக சிங்கப்பூர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் ஆளும் கட்சியான பிஏபியின் மூத்த உறுப்பினரும் அமைச்சருமான ஈஸ்வரன் மீதான ஊழல் குற்றச்சாட்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் உலக அரசியல் நோக்கர்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
எஸ்.ஈஸ்வரன் மீதான முறைகேடு குற்றச்சாட்டு
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதான முறைகேடு புகாரை அந்நாட்டு உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பணியில் இருக்கும் அரசு ஊழியர்களோ, அதிகாரிகளோ அலுவல்ரீதியாக தொடர்பில் இருக்கும் ஒருவரிடமிருந்து பொருட்களையோ அல்லது பணமோ பெறுவது சிங்கப்பூர் தண்டனைச் சட்டம் 165 பிரிவின் கீழ் குற்றமாகும். 65 வயதாகும் ஈஸ்வரன் இந்தச் சட்டத்தை மீறியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக லஞ்சம் - ஊழல் சார்ந்த வழக்கு பதியப்படுவது இதுவே முதல் முறை என்பதால் இந்த வழக்கு கவனம் பெறுகிறது.
சிங்கப்பூரில் ஆளும் பீப்பிள்ஸ் ஆக்ஷன் கட்சி கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தனது குடிமக்களின் முன்னேற்றத்தில் பலவகைகளில் கவனம் செலுத்தியதன் மூலம் அந்நாட்டு மக்களிடையே நற்பெயரை கட்டியெழுப்பியுள்ளது. ஒரு நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாவது கட்சி என்ற பெருமையை பெற்றது அக்கட்சி. இத்தனை ஆண்டுகள் கட்டிக் காத்த நற்பெயரை ஆட்டம் காண வைத்தது சமீபத்தில் அக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தவருமான எஸ்.ஈஸ்வரன் மீதான முறைகேடு குற்றச்சாட்டு.
1962-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஈஸ்வரன்,1997-ஆம் ஆண்டு முதன் முதலில் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004 முதல் 2006 வரை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக பதவி வகித்தார். 2018-ஆம் ஆண்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சராக பதவியேற்ற ஈஸ்வரன், பின்னர் வர்த்தக உறவுகளுக்கான அமைச்சராகவும் தொடர்ந்தார். 2021-ஆம் ஆண்டு அவருக்கு கூடுதலாக போக்குவரத்துத் துறை அமைச்சராகவுன் பொறுப்பு வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் ஃபார்முலா ஒன் (F1) இரவுப் பந்தயத்தை கொண்டு வந்ததற்காக மிகவும் பாராட்டப்பட்டார் ஈஸ்வரன். இந்த ஃபார்முலா ஒன் பந்தயத்துக்காக கோடீஸ்வரர் ஓங் பெங் செங் மற்றும் லம் சாங் ஹோல்டிங்ஸின் இயக்குநர், டேவிட் லம் ஆகிய தொழிலதிபர்களிடமிருந்து 4,00,000 சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள பரிசுகளைப் பெற்றதாக ஈஸ்வரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின் வழிநடத்தல் குழுவின் ஆலோசகராக ஈஸ்வரன் இருந்த காலகட்டத்தில், கார் பந்தயத்துக்கான உரிமையை வைத்திருந்தவர் ஓங் பெங் செங். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈஸ்வரன் கைது செய்யப்பட்ட சமயத்தில் அவருடன் ஓங் பெங் செங்கும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை.
அதேபோல வர்த்தக உறவுகள் துறை அமைச்சராக இருந்த ஈஸ்வரன், ஒரு ரயில்வே நிலையத்தின் கட்டுமான பணிகளுக்கான பொறுப்பை ஏற்றிருந்த லம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் டேவிட் லம் இடமிருந்து ஏராளமான பரிசுப் பொருட்களை பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதன் பிறகு சில நாள்களிலேயே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஈஸ்வரன், கட்சிப் பொறுப்பை மட்டுமின்றி அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும், தன் மீது விழுந்த களங்கத்தை விரைவில் துடைத்தெறிவேன் என்றும் உறுதி பூண்டார்.
எனினும், தன் மீது முன்வைக்கப்பட்ட 35 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஈஸ்வரன். சிங்கப்பூரில் இதுபோன்ற குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். எனினும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறைந்தபட்ச தண்டனையாக ஆறு முதல் ஏழு மாத சிறைத் தண்டனையை ஈஸ்வரனுக்கு பரிந்துரைத்துள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 3-ஆம் தேதி இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
ஈஸ்வரனின் வழக்கு விசாரணை இந்த மாத தொடக்கத்திலேயே திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் செப்.24 வரை தாமதமானது. அவரின் சட்டக் குழுவை ஆளும் பிஏபி கட்சியின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டேவிந்தர் சிங் வழிநடத்தினார். ஈஸ்வரனின் மனைவி உட்பட 56 சாட்சிகளை அரசு தரப்பு பட்டியலிட்டிருந்தது.
1986-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தேசிய வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த டெஹ் சியாங் வான், அரசு நிலத்தை விற்பனை செய்வதற்கு இரண்டு நிறுவனங்களிடம் இருந்து $1 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
உலகில் அதிகம் சம்பளம் பெறும் அரசியல்வாதிகளில் சிங்கப்பூர் அமைச்சர்களும் அடக்கம். அவர்களுக்கு மாதம் 46,750 சிங்கப்பூர் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஊழலை தடுக்க அரசு பதவியில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளம் அவசியம் என்பது அந்நாட்டு அரசின் கொள்கையாக உள்ளது. இதனால் ஊழல் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கையையும் சிங்கப்பூர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே உலகின் ஐந்தாவது ஊழல் குறைந்த நாடாக சிங்கப்பூர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஆளும் கட்சியான பிஏபியின் மூத்த உறுப்பினரும் அமைச்சருமான ஈஸ்வரன் மீதான ஊழல் குற்றச்சாட்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் உலக அரசியல் நோக்கர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?