நெல்லையில் தொடரும் கனமழை: களக்காடு தலையணையில் குளிக்க 2-வது நாளாக தடை
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து வருகிறது. அதாவது, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று 2- வது நாளாக களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து வருகிறது. அதாவது, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று (வியாழக்கிழமை) 2- வது நாளாக களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் சமவெளி பகுதிகளில் 145.80 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் 45 மில்லிமீட்டர் அதாவது நான்கு புள்ளி ஐந்து சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
What's Your Reaction?