தைவானில் மீண்டும் நிலநடுக்கம்: அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி
தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பலமுறை நில அதிர்வு ஏற்பட்டது.
தைபே: தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பலமுறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
முன்னதாக, கடந்த 3 ஆம் தேதி தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. அது, தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எனக் கூறப்பட்டது. அதில் 14 பேர் பலியாயினர். அதற்கும் முன்னதாக தைவானில் 1999-ம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 2,400 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 3-ல் ஏற்பட்டதுதான் பெரிய நிலநடுக்கம் எனக் கூறப்பட்டது.
What's Your Reaction?