`தேர்தல் கொண்டாட்டம் போதும்... மணிப்பூர் அமைதிக்காகக் காத்திருக்கிறது!' - RSS தலைவர் மோகன் பகவத்
இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் நடந்த முடிந்து மூன்றாவது முறையாக மோடி தலைமையில் என்.டி.ஏ அரசும், புதிய அமைச்சரவையும் அமைந்துவிட்டது. ஆனால், சரியாக ஓராண்டுக்கு முன்பு மணிப்பூரில் வெடித்த வன்முறை மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் அமைதியின்மை தொடர்ந்த பாடாகவே இருக்கிறது.மணிப்பூர் வன்முறை - பாஜகநேற்றுகூட முதல்வர் பிரேன் சிங்கின் கான்வாய் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மணிப்பூர் அமைதிக்காகக் காத்திருப்பதாகவும், தேர்தல் கொண்டாட்டத்திலிருந்து வெளிவந்து நாட்டின் பிரச்னைகளைக் கவனிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கிறார்.நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் அதில் பயிற்சி பெற்றவர்கள் மத்தியில் உரையாற்றிய மோகன் பகவத், ``மணிப்பூர் ஒரு வருடமாக அமைதிக்காகக் காத்திருக்கிறது. இதற்கு முன் 10 வருடங்களாக மாநிலம் அமைதியாக இருந்தது. பழைய துப்பாக்கி கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட அல்லது தூண்டப்பட்ட வன்முறை இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அது உதவிக்காக அழுதுகொண்டிருக்கிறது. யார் இதைக் கவனிப்பது... முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பிரச்னையை பரிசீலனை செய்வது நம் கடமை.ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தேர்தல் என்பது ஒருமித்த கருத்தை உருவாக்குதற்கான ஒரு செயல்முறை. அதுமட்டுமல்லாமல் இதுவொரு போட்டிதானே தவிர போர் அல்ல. எனவே, தேர்தல் கொண்டாட்டங்களிலிருந்து வெளிவந்து, நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதேபோல், எதிர்க்கட்சிகளை எதிரியாகப் பார்க்கக்கூடாது. அவர்களின் கருத்தும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். உலகம் முழுவதும் சமூகம் மாறிவிட்டது. அதன் விளைவாக முறையான மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாற்றம்தான் ஜனநாயகத்தின் சாராம்சம்" என்று கூறினார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிப்பூரில் மொத்தமுள்ள இரண்டு தொகுதிகளிலுமே பாஜக தோல்வியடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88‘ரெட்டைக் குழல்’ துப்பாக்கி - எப்படி இருக்கும் மோடி 3.0 ஆட்சி?!
இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் நடந்த முடிந்து மூன்றாவது முறையாக மோடி தலைமையில் என்.டி.ஏ அரசும், புதிய அமைச்சரவையும் அமைந்துவிட்டது. ஆனால், சரியாக ஓராண்டுக்கு முன்பு மணிப்பூரில் வெடித்த வன்முறை மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் அமைதியின்மை தொடர்ந்த பாடாகவே இருக்கிறது.
நேற்றுகூட முதல்வர் பிரேன் சிங்கின் கான்வாய் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மணிப்பூர் அமைதிக்காகக் காத்திருப்பதாகவும், தேர்தல் கொண்டாட்டத்திலிருந்து வெளிவந்து நாட்டின் பிரச்னைகளைக் கவனிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் அதில் பயிற்சி பெற்றவர்கள் மத்தியில் உரையாற்றிய மோகன் பகவத், ``மணிப்பூர் ஒரு வருடமாக அமைதிக்காகக் காத்திருக்கிறது. இதற்கு முன் 10 வருடங்களாக மாநிலம் அமைதியாக இருந்தது. பழைய துப்பாக்கி கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட அல்லது தூண்டப்பட்ட வன்முறை இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அது உதவிக்காக அழுதுகொண்டிருக்கிறது. யார் இதைக் கவனிப்பது... முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பிரச்னையை பரிசீலனை செய்வது நம் கடமை.
தேர்தல் என்பது ஒருமித்த கருத்தை உருவாக்குதற்கான ஒரு செயல்முறை. அதுமட்டுமல்லாமல் இதுவொரு போட்டிதானே தவிர போர் அல்ல. எனவே, தேர்தல் கொண்டாட்டங்களிலிருந்து வெளிவந்து, நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதேபோல், எதிர்க்கட்சிகளை எதிரியாகப் பார்க்கக்கூடாது. அவர்களின் கருத்தும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். உலகம் முழுவதும் சமூகம் மாறிவிட்டது. அதன் விளைவாக முறையான மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாற்றம்தான் ஜனநாயகத்தின் சாராம்சம்" என்று கூறினார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிப்பூரில் மொத்தமுள்ள இரண்டு தொகுதிகளிலுமே பாஜக தோல்வியடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?