துகாராம்: மீசைக்காக காத்திருந்த படக்குழு

ஆரம்பகால தமிழ் சினிமாவில், புராணம் மற்றும் பக்தி படங்களே அதிகம் உருவாக்கப்பட்டன

Sep 17, 2024 - 13:16
 0  1
துகாராம்: மீசைக்காக காத்திருந்த படக்குழு

ஆரம்பகால தமிழ் சினிமாவில், புராணம் மற்றும் பக்தி படங்களே அதிகம் உருவாக்கப்பட்டன. கதையாகக் கேட்ட விஷயங்களை, திரையில் பார்ப்பதை மக்கள் அதிகம் விரும்பியதால் அதுபோன்ற படங்கள் உருவாயின. அப்படி உருவான படங்களில் ஒன்று, ‘துகாராம்’. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாராஷ்டிர ஆன்மிக ஞானி ‘துகாராம்’ கதையை, 1921-ல் ஷிண்டே என்பவர் மவுனப்படமாக இயக்கினார். கலாநிதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் அதே ஆண்டில் ‘சந்த் துகாராம்’ என்ற பெயரில் மற்றொரு படத்தைத் தயாரித்தது. 1936-ல் துகாராமின் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து மராத்தியில் ஒரு படம் உருவானது. இந்தப் படத்தின் வெற்றிதான் தமிழ், தெலுங்கில் ‘துகாராம்’ கதையை படமாக்கத் தூண்டியது.

கோவையை சேர்ந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் தயாரித்த இந்தப் படத்தை பாலகிருஷ்ணன் நாராயண நாயர் என்ற பி.என்.ராவ் இயக்கினார். இவர் இந்தியில் வீர்குமாரி (1935 ), கீம்தி குர்பானி (1935) ஆகிய படங்களை இயக்கிவிட்டு தமிழுக்கு வந்தவர். பின்னர், ரம்பையின் காதல் (1939), பூலோக ரம்பை (1940), சாலிவாகனன் (1944) உட்பட பல படங்களை இயக்கினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist