தமிழில் மீண்டும் ராஷ்மிகா மந்தனா?
ராஷ்மிகா, தற்போது ‘புஷ்பா 2’, ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படங்களில் நடித்து வருகிறார்

சென்னை: ராஷ்மிகா, தற்போது ‘புஷ்பா 2’, ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, மீண்டும் அவர் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தமிழில் நேரடியாக, சுல்தான், வாரிசு படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
What's Your Reaction?






