தமிழகத்தில் நாளை முதல் அக்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை (அக்.14), நாளை மறுதினம் (அக்.15) ஒருசில இடங்களிலும், அக்.16 முதல் அக்.19ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.14), நாளை மறுதினம் (அக்.15) ஒருசில இடங்களிலும், அக்.16 முதல் அக்.19-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
What's Your Reaction?







