‘தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்’ - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 

Jun 11, 2025 - 15:57
 0  75
‘தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்’ - நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : எங்கள் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளும் வரும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் அது குறித்து பின்னர் தெரியவரும். தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று இபிஎஸ் தலைமையில் கூட்டணி கட்சி ஆட்சி அமையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist