“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” - முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தாக்கு
திமுக ஆட்சியில் 6 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பில்லை” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி குற்றஞ்சாட்டினார்.
பல்லாவரம்: “திமுக ஆட்சியில் 6 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி குற்றஞ்சாட்டினார்.
அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. பல்லாவரம் பகுதிச் செயலாளர் த.ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா வளர்மதி, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.தன்சிங் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
What's Your Reaction?