டைமண்ட் லீக் தொடர்: 89.49 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா

சுவிட்சர்லாந்தின் லாசன் நகரில் டைமண்ட் லீக் தடகளத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார். இந்த சீசனில் அவரது சிறப்பான செயல்திறனாக இது அமைந்தது.

Aug 24, 2024 - 10:07
 0  1
டைமண்ட் லீக் தொடர்: 89.49 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா

லாசன்: சுவிட்சர்லாந்தின் லாசன் நகரில் டைமண்ட் லீக் தடகளத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் பாரிஸ்ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார். இந்தசீசனில் அவரது சிறப்பான செயல்திறனாக இது அமைந்தது.

4-வது வாய்ப்பு வரை நீரஜ் சோப்ரா 4-வது இடத்தில்தான் இருந்தார். 5-வது முயற்சியில் 85.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து கடைசி முயற்சியில் அவர், 89.49 மீட்டர் தூரம் எறிந்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். தற்போது அதைவிட சற்று கூடுதல் தூரம் எறிந்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist