ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, என்று அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Jul 8, 2024 - 22:16
 0  1
ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக, திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த மார்ச் 9-ம் தேதி கைது செய்தனர். அதைத் தொடர்ந்து தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist