சென்னையில் வரும் 13 முதல் முதியோர் டி20 கிரிக்கெட்

சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் மூத்தோர் சங்கம் சார்பில் 50 பிளஸ் வயதினருக்கான டி.எஸ்.மகாலிங்கம் டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 13-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

Jul 8, 2024 - 22:16
 0  3
சென்னையில் வரும் 13 முதல் முதியோர் டி20 கிரிக்கெட்

சென்னை: சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் மூத்தோர் சங்கம் சார்பில் 50 பிளஸ் வயதினருக்கான டி.எஸ்.மகாலிங்கம் டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 13-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்தத் தொடர் ஜூலை 28-ம் தேதி வரை சென்னை தாம்பரத்தில் உள்ள ரெட்டி சுமங்கலி டர்ஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் விசிஏ, எம்சிசி, ஐஎன்எஸ்சி, ஐஎஃப்சிஆர், ஜிஎன்எஸ்சி, கோவை, சிடிசிஏ, எம்ஜிசி, எம்ஆர்சி, காஸ்மோ பாலிட்டன் ஆகிய 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 லீக் ஆட்டங்களில் விளையாடும். வெற்றி பெறும் அணிக்கு நான்கு புள்ளிகள் வழங்கப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist