செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறதா?!

சிறையில் செந்தில் பாலாஜி!தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் செந்தில் பாலாஜி. அவரை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று பல்வேறு நீதிமன்றங்களில் முறையிட்டும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கடைசியாக ஜாமீன் கோரிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.செந்தில் பாலாஜிஅமலாக்கத்துறை தரப்பு, செந்தில் பாலாஜிக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடக் கூடாது என்று பல்வேறு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர். அதேசமயத்தில் செந்தில் பாலாஜி தரப்பு, `ஒரு வருடத்துக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறேன். எனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டேன். இருதய அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறேன்’ என்று பல்வேறு வாதங்களை முன்வைத்து ஜாமீன் கோரியிருந்தது. அனைத்து கட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறார்.இன்னொரு வழக்கு!அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெறும் சமயத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டை நீதிமன்றம் பதிவு செய்தது. மேல்முறையீடு மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.செந்தில் பாலாஜி / அமலாக்கத்துறைஅந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு சாட்சியங்களின் விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சாட்சியங்களை விசாரணையைத் தொடரலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் செந்தில் பாலாஜி தரப்பில் போடப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை வரும் 28-ம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம். அதே சமயத்தில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 56-வது முறையாக வரும் 28-ம் தேதிவரை நீடித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.`ஜாமீனில் சிக்கல்.?!’ஒரு வருடத்தைக் கடந்தும் இன்னும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பது எதனால் என்பது குறித்து, திமுக வழக்கறிஞர் பிரிவு, சென்னை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம். "உண்மையில் இந்த வழக்கைப் பொறுத்தவரை எப்போதோ ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும். அமலாக்கத்துறை தரப்பு வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்தியது. கிட்டத்தட்ட ஒன்பது முறை அவகாசம் கேட்டு முடிந்தளவுக்கு இந்த வழக்கை இழுத்தடித்து அமலாக்கத்துறை. ஒருகட்டத்தில் நீதிபதியே கோபமடைந்ததினால்தான் இதற்கு மேல் அவகாசம் வழங்கமுடியாது என்று காட்டமாகப் பேசியிருந்தார். ஒரு பக்கம் அவகாசம் கேட்கிறது. இன்னொரு பக்கம் பென்ட்ரைவ் ஒன்றைச் சொல்லி அதில் ஆதாரம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தது. நீதிபதிகளும் அந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லி பலமுறை கேட்டுவிட்டார்கள்.செந்தில் பாலாஜிஆனால், அமலாக்கத்துறை வெறும் அவகாசம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் தீர்ப்பை ஒத்துவைத்துவிட்டு அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை மீண்டும் கேட்டதினாலும் மேலும் தாமதமானது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில், சாட்சியங்களை விசாரிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போது செந்தில் பாலாஜி வெளியே வந்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்று சொல்லி மேலும் ஒரு முட்டுக்கட்டை போடத் தயாராக இருக்கிறது அமலாக்கத்துறை. அமைச்சர் பதவியில் இருக்கிறார் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததனால்தான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அமலாக்கத்துறை ஒரு வாதத்துக்குத் தயாராகினால், எங்கள் தரப்பிலும் பதில் சொல்ல மிகவும் தயாராகவே இருக்கிறோம். அடுத்தது தீர்ப்பு வரும். அதில் செந்தில் பாலாஜிக்குக் ஜாமீன் கிடைத்துவிடும் என நம்புகிறோம்" என்றார்கள் விரிவாக. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88`புனையப்பட்ட வழக்கு..!’ - குற்றச்சாட்டு பதிவு; மறுத்த செந்தில் பாலாஜி - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Aug 24, 2024 - 10:07
 0  1
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறதா?!

சிறையில் செந்தில் பாலாஜி!

தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் செந்தில் பாலாஜி. அவரை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று பல்வேறு நீதிமன்றங்களில் முறையிட்டும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கடைசியாக ஜாமீன் கோரிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை தரப்பு, செந்தில் பாலாஜிக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடக் கூடாது என்று பல்வேறு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர். அதேசமயத்தில் செந்தில் பாலாஜி தரப்பு, `ஒரு வருடத்துக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறேன். எனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டேன். இருதய அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறேன்’ என்று பல்வேறு வாதங்களை முன்வைத்து ஜாமீன் கோரியிருந்தது. அனைத்து கட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறார்.

இன்னொரு வழக்கு!

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெறும் சமயத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டை நீதிமன்றம் பதிவு செய்தது. மேல்முறையீடு மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

செந்தில் பாலாஜி / அமலாக்கத்துறை

அந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு சாட்சியங்களின் விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சாட்சியங்களை விசாரணையைத் தொடரலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் செந்தில் பாலாஜி தரப்பில் போடப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை வரும் 28-ம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம். அதே சமயத்தில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 56-வது முறையாக வரும் 28-ம் தேதிவரை நீடித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

`ஜாமீனில் சிக்கல்.?!’

ஒரு வருடத்தைக் கடந்தும் இன்னும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பது எதனால் என்பது குறித்து, திமுக வழக்கறிஞர் பிரிவு, சென்னை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம். "உண்மையில் இந்த வழக்கைப் பொறுத்தவரை எப்போதோ ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும். அமலாக்கத்துறை தரப்பு வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்தியது. கிட்டத்தட்ட ஒன்பது முறை அவகாசம் கேட்டு முடிந்தளவுக்கு இந்த வழக்கை இழுத்தடித்து அமலாக்கத்துறை. ஒருகட்டத்தில் நீதிபதியே கோபமடைந்ததினால்தான் இதற்கு மேல் அவகாசம் வழங்கமுடியாது என்று காட்டமாகப் பேசியிருந்தார். ஒரு பக்கம் அவகாசம் கேட்கிறது. இன்னொரு பக்கம் பென்ட்ரைவ் ஒன்றைச் சொல்லி அதில் ஆதாரம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தது. நீதிபதிகளும் அந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லி பலமுறை கேட்டுவிட்டார்கள்.

செந்தில் பாலாஜி

ஆனால், அமலாக்கத்துறை வெறும் அவகாசம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் தீர்ப்பை ஒத்துவைத்துவிட்டு அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை மீண்டும் கேட்டதினாலும் மேலும் தாமதமானது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில், சாட்சியங்களை விசாரிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போது செந்தில் பாலாஜி வெளியே வந்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்று சொல்லி மேலும் ஒரு முட்டுக்கட்டை போடத் தயாராக இருக்கிறது அமலாக்கத்துறை. அமைச்சர் பதவியில் இருக்கிறார் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததனால்தான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அமலாக்கத்துறை ஒரு வாதத்துக்குத் தயாராகினால், எங்கள் தரப்பிலும் பதில் சொல்ல மிகவும் தயாராகவே இருக்கிறோம். அடுத்தது தீர்ப்பு வரும். அதில் செந்தில் பாலாஜிக்குக் ஜாமீன் கிடைத்துவிடும் என நம்புகிறோம்" என்றார்கள் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist