சீனாவில் மருத்துவமனைக்குள் கத்தி தாக்குதல்: இருவர் உயிரிழப்பு, பலர் காயம்

சீன நாட்டில் உள்ள மருத்துவமனைக்குள் பதைபதைக்க வைக்கும் வகையிலான தாக்குதல் அரங்கேறியுள்ளது. தெற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜென்சாங் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கத்தியைக் கொண்டு ஒருவர் தாக்கியுள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

May 10, 2024 - 17:18
 0  4
சீனாவில் மருத்துவமனைக்குள் கத்தி தாக்குதல்: இருவர் உயிரிழப்பு, பலர் காயம்

ஜென்சாங்: சீன நாட்டில் உள்ள மருத்துவமனைக்குள் பதைபதைக்க வைக்கும் வகையிலான தாக்குதல் அரங்கேறியுள்ளது. தெற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜென்சாங் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கத்தியைக் கொண்டு ஒருவர் தாக்கியுள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனை வளாகத்துககுள் அரங்கேறிய வன்முறைச் சம்பவம் என இந்தத் தாக்குதல் குறித்த தகவலை சீன அரசு தரப்பு ஊடகம் உறுதி செய்துள்ளது. தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist