ஏப்ரல் 2024 உலகின் அதிக வெப்பமான மாதம்: ஐரோப்பிய ஒன்றிய வானிலை ஆய்வு மையம் தகவல்
சர்வதேச கடல் மற்றும் புவி மேற்பரப்பு வெப்ப சராசரி ஏப்ரல் 2024-ல் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாரிஸ்: சர்வதேச கடல் மற்றும் புவி மேற்பரப்பு வெப்ப சராசரி ஏப்ரல் 2024-ல் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் உலகில் அதிக வெப்பம் பதிவான மாதமாக இந்த ஏப்ரல் மாதமாக இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?