விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா: எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார் 

விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் விரைவில் அறி​முகம் செய்​கிறார்.  கடந்த 2001-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்ட விக்​கிபீடியா உலகின் தகவல் களஞ்​சி​ய​மாக செயல்​படு​கிறது.

Oct 6, 2025 - 16:16
 0  1
விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா: எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார் 

வாஷிங்டன்: ​விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் விரை​வில் அறி​முகம் செய்​கிறார். கடந்த 2001-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்ட விக்​கிபீடியா உலகின் தகவல் களஞ்​சி​ய​மாக செயல்​படு​கிறது. விக்​கிமீடியா அறக்​கட்​டளை என்ற தொண்டு நிறு​வனம் விக்​கிபீடி​யாவை நிர்​வகித்து வரு​கிறது. இந்த தளம் சுமார் 300-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் தகவல்​களை வழங்கி வரு​கிறது. சுமார் 6.5 கோடிக்​கும் மேற்​பட்ட கட்​டுரைகள் இடம்​பெற்​றுள்​ளன.

தற்​போது விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற புதிய தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் விரை​வில் அறி​முகம் செய்ய உள்​ளார். இதுகுறித்து சமூக வலை​தளத்​தில் அவர் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “அடுத்த 2 வாரங்​களில் குரோக்​பீடியா தொடங்​கப்​படும்’’ என்று அறி​வித்​துள்​ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist