“கேட்டது 8 நாள் கால்ஷீட், விஜய் சேதுபதி ‘விடுதலை’யில் நடித்தது 120+ நாட்கள்!” - வெற்றிமாறன்
“8 நாள்தான் கால்ஷீட் என விஜய் சேதுபதியை இந்தப் படத்துக்கு கூப்பிட்டேன். ஆனால் இரண்டு பாகமும் சேர்த்து 257 நாட்கள் ஆகிவிட்டது. இதில் விஜய்சேதுபதி மட்டும் குறைந்தது 120 நாட்கள் நடித்திருப்பார். அந்த பொறுமைக்கு நன்றி” என ‘விடுதலை 2’ நிகழ்வில் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை: “8 நாள்தான் கால்ஷீட் என விஜய் சேதுபதியை இந்தப் படத்துக்கு கூப்பிட்டேன். ஆனால், இரண்டு பாகமும் சேர்த்து 257 நாட்கள் ஆகிவிட்டது. இதில் விஜய் சேதுபதி மட்டும் குறைந்தது 120 நாட்கள் நடித்திருப்பார். அந்த பொறுமைக்கு நன்றி” என ‘விடுதலை 2’ நிகழ்வில் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு படத்தை உருவாக்குவதற்கு நிறைய உழைப்பு தேவை. ஒருவர் நம்பும் விஷயத்தை மற்றவர்களும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது தான் படத்தின் வெற்றிக்கு முக்கியம். டிசம்பர், 2020 தான் படத்தை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.
What's Your Reaction?