கரோனா தகவல்களை சென்சார் செய்ய வெள்ளை மாளிகை அதிகாரிகள் அழுத்தம்: மார்க் ஸூகர்பெர்க்
மெட்டா நிறுவன சமூக வலைதளங்களில் கரோனா தொடர்பான கன்டென்ட் அடங்கிய பதிவுகளை சென்சார் செய்ய சொல்லி பைடன் - ஹாரிஸ் நிர்வாகம் தங்கள் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாக மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: மெட்டா நிறுவன சமூக வலைதளங்களில் கரோனா தொடர்பான கன்டென்ட் அடங்கிய பதிவுகளை சென்சார் செய்ய சொல்லி பைடன் - ஹாரிஸ் நிர்வாகம் தங்கள் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாக மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார். இதனை குடியரசுக் கட்சியின் நீதிக் குழுவிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளது என்ன என்பதை பார்ப்போம். “மெட்டா போன்ற நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு எப்படி செயல்படுகிறது என்பது குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது. இதில் எங்கள் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நான் தெளிவாக விவரிக்க விரும்புகிறேன்.
What's Your Reaction?