ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்: 13 இந்தியர்கள் உட்பட 16 மாயம்
ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்துள்ளது. அதன் பணியாளர்கள் 16 பேர் மாயமாகி உள்ளனர்.. இதில் 13 பேர் இந்தியர்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்.
மஸ்கட்: ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்துள்ளது. அதன் பணியாளர்கள் 16 பேர் மாயமாகி உள்ளனர்.. இதில் 13 பேர் இந்தியர்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்.
இதனை ஓமன் கடல் பாதுகாப்பு மையம் உறுதி செய்துள்ளது. ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் இந்த டேங்கரில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியாற்றி உள்ளனர். திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்தது.
What's Your Reaction?