ஐசிசி டி 20 பயிற்சி போட்டிக்கு வீரர்கள் இல்லாமல் ஆஸி. தவிப்பு
ஐசிசி டி 20 கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 2-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது.
மெல்பர்ன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் போட்டி வரும்ஜூன் 2-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது.இந்த தொடருக்காக ஆஸ்திரேலிய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி நமீபியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுடன் ஆஸ்திரேலிய அணி மோதுகிறது. இந்நிலையில் இந்த இரு ஆட்டங்களிலும் விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் மட்டுமே தற்போது உள்ளனர்.
இதற்கு காரணம் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த சில வீரர்கள் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்றதுதான். ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் அதில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சில நாட்கள் ஓய்வுக்கு பின்னரே டி 20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் ஆஸ்திரேலிய அணி தனது இரு பயிற்சி ஆட்டங்களிலும் பீல்டிங்கிற்கு உதவி பயிற்சியாளர்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?