ஈரானில் நடந்த வான் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் உயிரிழப்பு
ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஹமாஸ் தலைவர் வான் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலையை அரங்கேற்றியது இஸ்ரேல் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விருந்தினராக வந்தவரை கொன்ற இஸ்ரேலை பழிவாங்கு வோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கூறியுள்ளார்.
டெஹ்ரான்: ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஹமாஸ் தலைவர் வான் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலையை அரங்கேற்றியது இஸ்ரேல் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விருந்தினராக வந்தவரை கொன்ற இஸ்ரேலை பழிவாங்கு வோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா உள்ளிட்ட தலைவர்களை கொல்வோம் என இஸ்ரேல் ஏற்கெனவே கூறியது.
What's Your Reaction?