இஸ்ரேலுக்கு உடனடி பதிலடி தர இப்போதைக்கு திட்டமில்லை: ஈரான்
இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஈரான் பாதுகாப்புப் படை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “இன்று அதிகாலை இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ஃபாஹான் பகுதியில் உள்ள அணு உலையை சுற்றிய பகுதியில் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் ஆயுதங்களைப் பயன்படுத்தினோம்" என்று கூறியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (எப்.14) சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூளூம் சூழல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
What's Your Reaction?