“இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்” - அமெரிக்க தேர்தல் குறித்து போப் கருத்து

டொனால்ட் ட்ரம்பின் புலம்பெயர்ந்தோருக்கான கொள்கை,  கருக்கலைப்பு உரிமைக்கான கமலா ஹாரிஸின் ஆதரவினை மேற்கோள் காட்டி, இரண்டு அமெரிக்க அதிபர் வேட்பாளர்களும் வாழ்க்கைக்கு எதிரானவர்களாக தான் கருதுவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 

Sep 17, 2024 - 13:17
 0  4
“இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்” - அமெரிக்க தேர்தல் குறித்து போப் கருத்து

ரோம்: “டொனால்ட் ட்ரம்பின் புலம்பெயர்ந்தோருக்கான கொள்கை, கருக்கலைப்பு உரிமைக்கான கமலா ஹாரிஸின் ஆதரவினை மேற்கோள் காட்டி, இரண்டு அமெரிக்க அதிபர் வேட்பாளர்களையும் வாழ்க்கைக்கு எதிரானவர்களாக தான் கருதுவதாக” போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். தனது 12 நாட்கள் ஆசிய பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் ரோம் திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய போப், “இருவரும் வாழ்க்கைக்கு எதிரானவர்கள். அவர்களில் ஒருவர் புலம்பெயர்ந்தோர்களை நிராகரிப்பவர், மற்றொருவர் குழந்தைகளைக் கொல்பவர்.

நான் ஒரு அமெரிக்கர் இல்லை. நான் அங்கு வாக்களிக்கப் போவதும் இல்லை. ஆனால் ஒன்று தெளிவாக இருக்கட்டும்: இருவரும் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுகிறார்கள். அவர்களுக்கு வேலை வழங்குவதில்லை. அப்படிப்பட்ட இருவரையும் ஆதரிப்பது பாவம். அமெரிக்கர்கள் இப்போது, இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். யார் மிகவும் குறைவான தீமை உடையவர்? அந்த பெண்மணியா அல்லது அந்த கனவானா? அது எனக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் தங்களின் மனசாட்சிப்படி சிந்தித்து முடிவெடுக்கட்டும்” என்று போப் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist