“இந்த வெற்றிக்காகத்தான் காத்திருந்தோம்... கடவுளே நன்றி” - ஆப்கன் ஆட்ட நாயகன் நயீப்

எதிர்பாராதது என்று சொல்ல முடியாது. ஏனெனில் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையிலேயே ஆப்கனிடம் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்திருக்க வேண்டும். முஜிபுர் ரஹ்மான், கிளென் மேக்ஸ்வெலுக்கு விட்ட கேட்சை அடுத்து மேக்ஸ்வெல் வெங்கலகடையில் யானை புகுந்தது போல் புகுந்து விளாசி ஆஸ்திரேலியாவை வெற்றிபெறச் செய்தார்.

Jun 24, 2024 - 17:56
 0  1
“இந்த வெற்றிக்காகத்தான் காத்திருந்தோம்... கடவுளே நன்றி” - ஆப்கன் ஆட்ட நாயகன் நயீப்

எதிர்பாராதது என்று சொல்ல முடியாது. ஏனெனில் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையிலேயே ஆப்கனிடம் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்திருக்க வேண்டும். முஜிபுர் ரஹ்மான், கிளென் மேக்ஸ்வெலுக்கு விட்ட கேட்சை அடுத்து மேக்ஸ்வெல் வெங்கலகடையில் யானை புகுந்தது போல் புகுந்து விளாசி ஆஸ்திரேலியாவை வெற்றிபெறச் செய்தார். அது அன்று. ஆனால் இன்று ஆப்கன் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே கிளென் மேக்ஸ்வெல்தான் நின்று கொண்டிருந்தார். ஆனால் இன்றைய நாயகன் குல்புதீன் நயீப் அவரை ஆட்டிப்படைத்ததோடு வீழ்த்தியும் விடவே ஆப்கன் வெற்றிக் கனவு பலித்தது.

டாஸ் வென்று ஆப்கானிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்து முதல் தவறைச் செய்தார் மிட்செல் மார்ஷ். அடுத்து, மிட்செல் ஸ்டார்க்கை ட்ராப் செய்தது ஆகப்பெரும் தவறு. டாஸ் வின் செய்தால் பேட்டிங் ஆடி, 170 ரன்களை அடித்து விட்டு எதிரணியை மடக்குவதுதான் சிறந்த அணிகளின் வழிமுறையாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist