இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் பதவி விலகல்
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் ஸ்பெயின் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்திருந்தது.
லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் ஸ்பெயின் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்திருந்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார்.
கடந்த 2016-ம்ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக சவுத்கேட் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. மேலும் தொடர்ச்சியாக இரு முறை யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியிருந்தது. சவுத்கேட்டின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில் முன்னதாகவே பதவி விலகி உள்ளார்.
What's Your Reaction?