ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறைதீர்க்க அலுவலர்கள் நியமனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களில் ஊதிய முரண்பாடுகளை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களில் ஊதிய முரண்பாடுகளை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் இணை இயக்குநர்கள், அலுவலர்களுக்கான பணி பொறுப்புகள் மாற்றப்பட்டு ஆசிரியர்கள், பணியாளர்களின் ஊதிய முரண்பாடு சார்ந்த கருத்துருவை நிதிக்கட்டுப்பாடு அலுவலரின் நிர்வாக பொறுப்பில் செயல்படுத்த ஆணையிடப்பட்டிருந்தது.
What's Your Reaction?







