அருப்புக்கோட்டை: முதியோர் உதவி தொகை ரூ.48 லட்சம் கையாடல் - நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டத்தில், முதியோர் உதவித்தொகை திட்டத்தில் இறந்துபோன பயனாளிகள் பெயரை பயன்படுத்தி, ஒருவர் அரசுப்பணத்தை கையாடல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தசம்பவம் தொடர்பாக வருவாய்துறை அலுவலரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், ``அரசு அலுவலகங்களில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மூலம் அரசு சம்பள கணக்கு, பில் கணக்குகள், திட்ட உதவி தொகைகள், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற வரவு, செலவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக அரசின் ஒவ்வொரு துறையிலும் அலுவலர்கள் இருந்தாலும் கூடுதல் பணிச்சுமை காரணமாகவும், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,சை முழு அளவில் பயன்படுத்துவதில் சிலநுட்பங்கள் தெரியாததாலும் சில துறையினர் மட்டும் வெளியே தனியார் கணினி உதவியாளர்களை பயன்படுத்தி பில் மற்றும் உதவித்தொகை பரிமாற்றம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.காவல்நிலையம்அந்தவகையில் செம்பட்டியை சேர்ந்த ஒரு நபரை அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள், முதியோர் உதவித்தொகை திட்டத்தில் பணத்தை பரிமாற்றம் செய்யும் பணியில் நியமித்துள்ளனர். அரசு விதிகளின்படி, அந்தநபர் ஒப்பந்த ஊழியரும் கிடையாது. அவர் செய்வது அரசுப்பணி என்றும் வெளியே சொல்லமுடியாது. முதியோர்களுக்கான உதவித்தொகை விவரத்தை வருவாய்த்துறையினர் சரிபார்த்த பின்பு சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு பணம் அனுப்ப அனுமதிக்கும் பணியை இவர் செய்துவந்துள்ளார். இந்நிலையில் 2019 முதல் 2024 வரை முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகளில் இறந்தவர்களின் பெயரை நீக்காமல் அவர்களது வங்கி கணக்கை மட்டும் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக தனது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வங்கி கணக்குகளை மாற்றம்செய்து அரசு வழங்கிய முதியோர் உதவித்தொகை பணத்தை கையாடல் செய்துவந்துள்ளார்.இந்த முறைகேடு, 2019 முதல் தொடர்ந்து, 5 ஆண்டுகளாக நடந்துவந்துள்ளது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தின் தற்போதைய சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார், முதியோர் உதவித்தொகை திட்டத்தில் பயனாளிகளாக இருந்து இறந்துபோனவர்களின் பெயர்களை நீக்கிட ஆய்வுசெய்தபோது அதிக எண்ணிக்கையிலான நபர்கள் இறந்துபோயிருப்பதாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. "அருப்புக்கோட்டை தாலுகாவில் குறிப்பிட்டு ஒரு மாதத்தில் மட்டும் இத்தனை பயனாளிகள் இறந்துள்ளனரா" என சந்தேகப்பட்டு ஆய்வு செய்தபோது பயனாளிகள் இறந்துபோன தேதி, மாதம் மற்றும் ஆண்டுகள் வெவ்வேறாக இருந்துள்ளது. இதனால் கூடுதல் சந்தேகமடைந்த அதிகாரிகள், பயனாளிகளின் வங்கி கணக்கு விவரங்களை தணிக்கை செய்துள்ளனர்.அப்போது, முதியோர் உதவித்தொகைத்திட்ட பயனாளர்களில் இறந்து போனவர்களின் பெயரை பயன்படுத்தி அரசுப்பணம் ரூ.48 லட்சத்தை உதவித்தொகை பணம் அனுமதிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் கணினி உதவியாளர் தனது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, தனியார் பணியாளரின் வங்கிகணக்கை மாவட்ட நிர்வாகம் ஆய்வுசெய்ததில் அதில் ரூ.15 லட்சம் இருப்பது தெரியவந்ததையடுத்து அந்த நபரின் வங்கிக்கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்பட்டது. மேலும், அவரின் மீது அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் இன்னும் வழக்குப்பதிவு செய்யாதநிலையில், கையாடல் சம்பவத்தில் கிராம உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளருக்கும் தொடர்புள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, அவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.” என்கிறார்கள். பணமோசடி வழக்கில் பவன் முஞ்சால்... ஹீரோ மோட்டோகார்ப் பங்குக்கு சிக்கல்!இந்தசம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேசுகையில், 'சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனேயே, அருந்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகையை அனுமதிக்கும் பணியில் ஈடுபட்ட இந்த தனிநபருக்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் என்ன சம்பந்தம், பயனாளர் எண், உதவித்தொகையை அனுமதிக்கும் கடவுச்சொற்கள் எப்படி அவருக்கு சென்றது. மேலும் மோசடி நடப்பதை, பயனாளர்கள் இறந்ததை அந்தந்த காலக்கட்டத்தில் பதவி வகித்த தாசில்தார்கள் ஏன் ஆண்டுக்கு ஒரு முறை கூட ஆய்வு செய்யவில்லை என துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்' என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
விருதுநகர் மாவட்டத்தில், முதியோர் உதவித்தொகை திட்டத்தில் இறந்துபோன பயனாளிகள் பெயரை பயன்படுத்தி, ஒருவர் அரசுப்பணத்தை கையாடல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தசம்பவம் தொடர்பாக வருவாய்துறை அலுவலரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், ``அரசு அலுவலகங்களில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மூலம் அரசு சம்பள கணக்கு, பில் கணக்குகள், திட்ட உதவி தொகைகள், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற வரவு, செலவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக அரசின் ஒவ்வொரு துறையிலும் அலுவலர்கள் இருந்தாலும் கூடுதல் பணிச்சுமை காரணமாகவும், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,சை முழு அளவில் பயன்படுத்துவதில் சிலநுட்பங்கள் தெரியாததாலும் சில துறையினர் மட்டும் வெளியே தனியார் கணினி உதவியாளர்களை பயன்படுத்தி பில் மற்றும் உதவித்தொகை பரிமாற்றம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.
அந்தவகையில் செம்பட்டியை சேர்ந்த ஒரு நபரை அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள், முதியோர் உதவித்தொகை திட்டத்தில் பணத்தை பரிமாற்றம் செய்யும் பணியில் நியமித்துள்ளனர். அரசு விதிகளின்படி, அந்தநபர் ஒப்பந்த ஊழியரும் கிடையாது. அவர் செய்வது அரசுப்பணி என்றும் வெளியே சொல்லமுடியாது. முதியோர்களுக்கான உதவித்தொகை விவரத்தை வருவாய்த்துறையினர் சரிபார்த்த பின்பு சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு பணம் அனுப்ப அனுமதிக்கும் பணியை இவர் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் 2019 முதல் 2024 வரை முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகளில் இறந்தவர்களின் பெயரை நீக்காமல் அவர்களது வங்கி கணக்கை மட்டும் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக தனது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வங்கி கணக்குகளை மாற்றம்செய்து அரசு வழங்கிய முதியோர் உதவித்தொகை பணத்தை கையாடல் செய்துவந்துள்ளார்.
இந்த முறைகேடு, 2019 முதல் தொடர்ந்து, 5 ஆண்டுகளாக நடந்துவந்துள்ளது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தின் தற்போதைய சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார், முதியோர் உதவித்தொகை திட்டத்தில் பயனாளிகளாக இருந்து இறந்துபோனவர்களின் பெயர்களை நீக்கிட ஆய்வுசெய்தபோது அதிக எண்ணிக்கையிலான நபர்கள் இறந்துபோயிருப்பதாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. "அருப்புக்கோட்டை தாலுகாவில் குறிப்பிட்டு ஒரு மாதத்தில் மட்டும் இத்தனை பயனாளிகள் இறந்துள்ளனரா" என சந்தேகப்பட்டு ஆய்வு செய்தபோது பயனாளிகள் இறந்துபோன தேதி, மாதம் மற்றும் ஆண்டுகள் வெவ்வேறாக இருந்துள்ளது. இதனால் கூடுதல் சந்தேகமடைந்த அதிகாரிகள், பயனாளிகளின் வங்கி கணக்கு விவரங்களை தணிக்கை செய்துள்ளனர்.
அப்போது, முதியோர் உதவித்தொகைத்திட்ட பயனாளர்களில் இறந்து போனவர்களின் பெயரை பயன்படுத்தி அரசுப்பணம் ரூ.48 லட்சத்தை உதவித்தொகை பணம் அனுமதிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் கணினி உதவியாளர் தனது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, தனியார் பணியாளரின் வங்கிகணக்கை மாவட்ட நிர்வாகம் ஆய்வுசெய்ததில் அதில் ரூ.15 லட்சம் இருப்பது தெரியவந்ததையடுத்து அந்த நபரின் வங்கிக்கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்பட்டது. மேலும், அவரின் மீது அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் இன்னும் வழக்குப்பதிவு செய்யாதநிலையில், கையாடல் சம்பவத்தில் கிராம உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளருக்கும் தொடர்புள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, அவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.” என்கிறார்கள்.
இந்தசம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேசுகையில், 'சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனேயே, அருந்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகையை அனுமதிக்கும் பணியில் ஈடுபட்ட இந்த தனிநபருக்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் என்ன சம்பந்தம், பயனாளர் எண், உதவித்தொகையை அனுமதிக்கும் கடவுச்சொற்கள் எப்படி அவருக்கு சென்றது. மேலும் மோசடி நடப்பதை, பயனாளர்கள் இறந்ததை அந்தந்த காலக்கட்டத்தில் பதவி வகித்த தாசில்தார்கள் ஏன் ஆண்டுக்கு ஒரு முறை கூட ஆய்வு செய்யவில்லை என துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்' என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?