அமெரிக்காவின் முதல் கருப்பின விண்வெளி வீரர் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்றார்!
அமெரிக்காவின் முதல் கருப்பின விண்வெளி வீரர் எட் டுவைட் (Ed Dwight), சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் அவர் பயணித்தார். அவருடன் மேலும் 5 பேர் பயணித்தனர்.
நியூயார்க்: அமெரிக்காவின் முதல் கருப்பின விண்வெளி வீரர் எட் டுவைட் (Ed Dwight), சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் அவர் பயணித்தார். அவருடன் மேலும் 5 பேர் பயணித்தனர்.
அமெரிக்க விமானப்படையின் விமானியாக எட் டுவைட் பணியாற்றிய காலத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, அவரை நாசாவின் ஆரம்பகால விண்வெளி வீரர்களுக்கான தேர்வு பட்டியலில் சேர்த்திருந்தார். ஆனால், அவரை நாசா தேர்வு செய்யவில்லை. இந்தச் சூழலில் நிறவெறி பேதம் காரணமாக தனது பணியை 1966-ல் துறந்தார்.
What's Your Reaction?