அமலாக்கத் துறை வழக்கு: அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 19) நேரில் ஆஜராகினர்.

Mar 19, 2025 - 17:11
 0  16
அமலாக்கத் துறை வழக்கு: அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 19) நேரில் ஆஜராகினர்.

கடந்த 2006 - 11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ. 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist