TVK: 3 மணிநேர நிகழ்ச்சி; விருந்தினர்கள் வருகை; தடபுடல் விருந்து - தவெக ஆண்டு விழாவில் என்ன ஸ்பெஷல்?
மகாபலிபுரத்தில் தவெகவின் ஆண்டு விழா நிகழ்வு நாளை நடைபெறவிருக்கிறது. விஜய் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த நிகழ்வை விமர்சையாக நடத்தி முடிக்க தவெக தரப்பு பல்வேறு திட்டங்களை தீட்டியிருக்கிறது.நிகழ்வின் பின்னணி:கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை விஜய் தொடங்கியிருந்தார். கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை கடந்த மாதம் பிப்ரவரி 2 ஆம் தேதியே கொண்டாட திட்டமிட்டிருந்தனர். கட்சியை தொடங்கிய ஓராண்டுக்குள் அத்தனை மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டமாக இருந்தது. அதற்காக பரபரவென வேலைகளும் நடந்தது. ஜனவரி கடைசி வாரத்திலிருந்து 19 மாவட்டங்களாக, 5 கட்டமாக நிர்வாகிகளை சந்தித்து நியமன ஆணைகளையும் விஜய் வழங்கினார். tvk vijayமேலும், பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பையனூரில் அவர் நடித்துகொண்டிருக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. நிர்வாகிகள் நியமனமும் வேகமாக நடந்துகொண்டிருந்ததால் அப்போது இந்த ஆண்டு விழாவை நடத்தவில்லை. கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து அவர் கொள்கைத் தலைவர்களாக அறிவித்திருக்கும் பெரியார், அம்பேத்கர் போன்றோரின் சிலைகளை மட்டும் விஜய் திறந்து வைத்திருந்தார். `நீங்க எங்க எதிரி இல்லை; தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள்' - TVK விமர்சனத்துக்கு NTK பதில்பையனூர் ஏன்?இதனைத் தொடர்ந்துதான் தமிழகம் முழுவதுமிருந்து நிர்வாகிகளை அழைத்து ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டார். பையனூரில் நடந்து வந்த அவரின் படப்பிடிப்பும் பிப்ரவரி 23 ஆம் தேதியோடு முடிந்த நிலையில், நல்ல நாளாக பார்த்து மகா சிவராத்திரியான பிப்ரவரி 26 ஆம் தேதி ஆண்டுவிழாவை நடத்த விஜய் தரப்பு திட்டமிட்டது. பொதுச்செயலாளர் ஆனந்தும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் ஆண்டு விழாவை நடத்தி முடிக்கும் வேலைகளில் இறங்கினர்.tvk vijayநந்தனம் YMCA மைதானத்தில் இந்த ஆண்டு விழாவை நடத்த வேண்டும் என்பதுதான் தவெகவின் முதல் ஆப்சனாக இருந்திருக்கிறது. ஆனால், அங்கே அடிக்கடி இசைக் கச்சேரிகள் நடப்பதால் அந்த இடம் கிடைக்கவில்லை. உடனடியாக, நீலாங்கரையிலுள்ள ஒரு பெரிய Conventional ஹாலில் நடத்தலாம் எனும் முடிவை எடுத்திருக்கின்றனர். முன்னதாக விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவையும் அங்கேதான் நடத்தியிருந்தனர். ஆனால், அங்கே நடத்துவதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகுதான் மகாபலிபுரம் அருகே இருக்கும் பூஞ்சேரியில் ஒரு தனியார் விடுதியை டிக் அடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு விழா சம்பந்தமான ஏற்பாடுகள் அத்தனையையும் ஆதவ் தரப்புதான் செய்வதாக தகவல் சொல்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர். TVK : `கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!2500 பேர் அமரும் வகையிலான ஒரு ஹாலில்தான் ஆண்டு விழா நிகழ்வு நடைபெறுகிறது. தவெகவில் மொத்தம் 120 மாவட்டங்கள் இருக்கிறது. ஒரு மாவட்டத்துக்கு 20 பேர் வீதம் கலந்துகொள்ள வேண்டும் என தலைமையிடமிருந்து உத்தரவு போயிருக்கிறது. மாவட்டத்துக்கு 15 நிர்வாகிகள் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார்கள். இதில் 10 பேர் செயற்குழு உறுப்பினர்கள். இந்த செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்துவிட்டு ஒன்றிய, நகர பொறுப்புகளிலிருந்து அதிகப்படியான நிர்வாகிகளை அழைத்து வருமாறும் மா.செக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. Vijay TVK நான்கு நாட்களுக்கு முன்பாக அவர்களுக்கான பாஸையும் மா.செக்களிடம் ஒப்படைத்திருக்கிறது தலைமை. மாவட்ட நிர்வாகிகள் போல முக்கியமான மாநில நிர்வாகிகள் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இவர்களை தவிர தொண்டர்கள் யாருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதியில்லை. இதையெல்லாம் ஒருங்கிணைக்க செங்கல்பட்டு, திருப்போரூர் மாவட்டங்களை சேர்ந்த 18 நிர்வாகிகளை நியமித்து ஒரு ஒருங்கிணைப்புக்குழுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. காலை 10 மணி முதல் தொடங்கி 1 மணி வரை ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். விஜய் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தாண்டி வெளியிலிருந்தும் சில சிறப்பு விருந்தினர்களை அழைக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோருக்கும் புதுச்சேரி முதல்வரான ரங்கசாமிக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் சென்றிருப்பதாக சொல்கிறார்கள். நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பிறகு நிர்வாகிகளுக்கு தடபுடலான மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாயுக்கு மதிய விருந்து மட்டும் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சிலரும் ஒரு சில நிர்வாகிகளும் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். பா.ஜ.க, நா.த.க போன்ற மாற்று கட்சிகளிலிருந்தும் சில நிர்வாகிகள் பனையூர் பக்கமாக வர தயாராக இருக்கிறார்களாம். tvk vijayதவெக தரப்பும் அவர்களுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறதாம். அதேநேரத்தில் அவர்களை இந்த நிகழ்வில் மேடையேற்ற வாய்ப்பு குறைவே என்கின்றனர்.விழாவின் ஹைலைட்டாக திமுக எதிர்ப்பை கட்சியினரிடையே வலுப்படுத்தும் வகையில் விஜய்யின் பேச்சு இருக்கும் என்றும் சொல்கின்றனர் முக்கிய நிர்வாகிகள்.Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel

மகாபலிபுரத்தில் தவெகவின் ஆண்டு விழா நிகழ்வு நாளை நடைபெறவிருக்கிறது. விஜய் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த நிகழ்வை விமர்சையாக நடத்தி முடிக்க தவெக தரப்பு பல்வேறு திட்டங்களை தீட்டியிருக்கிறது.
நிகழ்வின் பின்னணி:
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை விஜய் தொடங்கியிருந்தார். கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை கடந்த மாதம் பிப்ரவரி 2 ஆம் தேதியே கொண்டாட திட்டமிட்டிருந்தனர். கட்சியை தொடங்கிய ஓராண்டுக்குள் அத்தனை மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டமாக இருந்தது. அதற்காக பரபரவென வேலைகளும் நடந்தது. ஜனவரி கடைசி வாரத்திலிருந்து 19 மாவட்டங்களாக, 5 கட்டமாக நிர்வாகிகளை சந்தித்து நியமன ஆணைகளையும் விஜய் வழங்கினார்.
மேலும், பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பையனூரில் அவர் நடித்துகொண்டிருக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. நிர்வாகிகள் நியமனமும் வேகமாக நடந்துகொண்டிருந்ததால் அப்போது இந்த ஆண்டு விழாவை நடத்தவில்லை. கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து அவர் கொள்கைத் தலைவர்களாக அறிவித்திருக்கும் பெரியார், அம்பேத்கர் போன்றோரின் சிலைகளை மட்டும் விஜய் திறந்து வைத்திருந்தார்.
பையனூர் ஏன்?
இதனைத் தொடர்ந்துதான் தமிழகம் முழுவதுமிருந்து நிர்வாகிகளை அழைத்து ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டார். பையனூரில் நடந்து வந்த அவரின் படப்பிடிப்பும் பிப்ரவரி 23 ஆம் தேதியோடு முடிந்த நிலையில், நல்ல நாளாக பார்த்து மகா சிவராத்திரியான பிப்ரவரி 26 ஆம் தேதி ஆண்டுவிழாவை நடத்த விஜய் தரப்பு திட்டமிட்டது. பொதுச்செயலாளர் ஆனந்தும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் ஆண்டு விழாவை நடத்தி முடிக்கும் வேலைகளில் இறங்கினர்.
நந்தனம் YMCA மைதானத்தில் இந்த ஆண்டு விழாவை நடத்த வேண்டும் என்பதுதான் தவெகவின் முதல் ஆப்சனாக இருந்திருக்கிறது. ஆனால், அங்கே அடிக்கடி இசைக் கச்சேரிகள் நடப்பதால் அந்த இடம் கிடைக்கவில்லை. உடனடியாக, நீலாங்கரையிலுள்ள ஒரு பெரிய Conventional ஹாலில் நடத்தலாம் எனும் முடிவை எடுத்திருக்கின்றனர். முன்னதாக விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவையும் அங்கேதான் நடத்தியிருந்தனர். ஆனால், அங்கே நடத்துவதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகுதான் மகாபலிபுரம் அருகே இருக்கும் பூஞ்சேரியில் ஒரு தனியார் விடுதியை டிக் அடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு விழா சம்பந்தமான ஏற்பாடுகள் அத்தனையையும் ஆதவ் தரப்புதான் செய்வதாக தகவல் சொல்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.
2500 பேர் அமரும் வகையிலான ஒரு ஹாலில்தான் ஆண்டு விழா நிகழ்வு நடைபெறுகிறது. தவெகவில் மொத்தம் 120 மாவட்டங்கள் இருக்கிறது. ஒரு மாவட்டத்துக்கு 20 பேர் வீதம் கலந்துகொள்ள வேண்டும் என தலைமையிடமிருந்து உத்தரவு போயிருக்கிறது. மாவட்டத்துக்கு 15 நிர்வாகிகள் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார்கள். இதில் 10 பேர் செயற்குழு உறுப்பினர்கள். இந்த செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்துவிட்டு ஒன்றிய, நகர பொறுப்புகளிலிருந்து அதிகப்படியான நிர்வாகிகளை அழைத்து வருமாறும் மா.செக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
நான்கு நாட்களுக்கு முன்பாக அவர்களுக்கான பாஸையும் மா.செக்களிடம் ஒப்படைத்திருக்கிறது தலைமை. மாவட்ட நிர்வாகிகள் போல முக்கியமான மாநில நிர்வாகிகள் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இவர்களை தவிர தொண்டர்கள் யாருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதியில்லை. இதையெல்லாம் ஒருங்கிணைக்க செங்கல்பட்டு, திருப்போரூர் மாவட்டங்களை சேர்ந்த 18 நிர்வாகிகளை நியமித்து ஒரு ஒருங்கிணைப்புக்குழுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
காலை 10 மணி முதல் தொடங்கி 1 மணி வரை ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். விஜய் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தாண்டி வெளியிலிருந்தும் சில சிறப்பு விருந்தினர்களை அழைக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோருக்கும் புதுச்சேரி முதல்வரான ரங்கசாமிக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் சென்றிருப்பதாக சொல்கிறார்கள்.
நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பிறகு நிர்வாகிகளுக்கு தடபுடலான மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாயுக்கு மதிய விருந்து மட்டும் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சிலரும் ஒரு சில நிர்வாகிகளும் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். பா.ஜ.க, நா.த.க போன்ற மாற்று கட்சிகளிலிருந்தும் சில நிர்வாகிகள் பனையூர் பக்கமாக வர தயாராக இருக்கிறார்களாம்.
தவெக தரப்பும் அவர்களுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறதாம். அதேநேரத்தில் அவர்களை இந்த நிகழ்வில் மேடையேற்ற வாய்ப்பு குறைவே என்கின்றனர்.
விழாவின் ஹைலைட்டாக திமுக எதிர்ப்பை கட்சியினரிடையே வலுப்படுத்தும் வகையில் விஜய்யின் பேச்சு இருக்கும் என்றும் சொல்கின்றனர் முக்கிய நிர்வாகிகள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
What's Your Reaction?






