Priyanka Gandhi: 20 ஆண்டுகள் பிரசார குரல் டு வேட்பாளர்... பிரியங்காவின் அரசியல் ஃப்ளாஷ்பேக்!
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றிபெற்றார். இதனால், இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய சூழலில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு மக்களவைத் தொகுதியை ராகுல் ராஜினாமா செய்வார் என்று அறிவித்தார்.சோனியா, கார்கே, பிரியங்கா, ராகுல்அதோடு, வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) போட்டியிடுவார் என்றும் கார்கே அறிவித்தார். இதன்மூலம், சுமார் 20 வருடங்களாகக் காங்கிரஸின் பிரசார முகமாகச் செயல்பட்டுவந்த பிரியங்கா காந்தி முதல்முறையாக நேரடியாக ஒரு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடவிருக்கிறார்.இந்திரா சாயல்!நேரு குடும்பத்தில் 1972-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி, ராஜிவ் காந்திக்கும் சோனியா காந்திக்கும் இரண்டாவது குழந்தையாக பிரியங்கா காந்தி பிறந்தார். பள்ளி கல்வியைப் பொறுத்தவரை, ராகுலும் பிரியங்காவும் தங்களின் பாட்டி இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சில காலம் வீட்டிலேயே பயின்றனர்.பிரியங்கா காந்திபின்னர் பள்ளி மேற்படிப்பில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் ஜீசஸ் & மேரி கல்லூரியில் உளவியல் பாடப்பிரிவில் பிரியங்கா இளங்கலை பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து, 2010-ல் புத்த மதக் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இதற்கிடையில், 1997-ல் தொழிலதிபர் ராபர்ட் வதேராவை பிரியங்கா மணந்தார். இந்த தம்பதிக்கு ரைஹான் என்ற மகனும், மிராயா என்ற மகளும் இருக்கின்றனர். தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட இவர்கள் வாக்களித்தனர்.இந்திரா காந்தி - ராகுல் - பிரியங்காதங்களின் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் ஆரம்ப காலங்களில் அரசியலிலிருந்து பிரியங்கா ஒதுங்கியே இருந்தார். இருப்பினும், பிரியங்காவின் சிகையலங்காரம், கைத்தறி புடவைகளை அணிவது போன்றவற்றால் அவரின் பாட்டியுடன் அவர் ஒப்பிடப்பட்டார். நேரு குடும்பத்தில் அரசியல் பாரம்பரியத்தின் உண்மையான பிரதிநிதியாகப் பிரியங்கா இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.பிரசார களத்தில் பிரியங்கா!அரசியலில் பிரியங்கா களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், 2004 நாண்டளுமன்றத் தேர்தலில் நேரு குடும்பத்தின் பாரம்பர்ய தொகுதியான அமேதியில் அவரின் சகோதரர் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், 1999 முதல் 2004 வரை அமேதி எம்.பி-யாக இருந்த அவரின் சோனியா காந்தி, இந்திரா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமரான ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது ரேபரேலி, அமேதி என இரண்டு தொகுதிகளிலும் தன்னுடைய தாய் மற்றும் சகோதரரை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார்.அம்மாவுடன் பிரியங்கா காந்திஅந்தத் தேர்தலில் இருவரும் வெற்றியும் பெற்றனர். அதன்பின்னர், 2007-ல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உள்ளூர் தலைவர்களிடம் கலந்துரையாடுவது என களத்தில் இறங்கிய பிரியங்கா, ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிக்குட்பட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கவனித்தார். ஆனால், அந்தத் தேர்தல் காங்கிரஸ் 2002-ல் பெற்ற இடங்களை விடவும் 3 இடங்கள் குறைவாக 22 இடங்களை மட்டுமே வென்றது. அதன்பின்னர், பிரியங்கா பெரும்பாலும் தேர்தல் சமயங்களில் காங்கிரஸின் பாரம்பர்ய தொகுதிகளான ரேபரேலி, அமேதி பிரசாரங்களில் தலைகாட்டி வந்தார்.அதிகாரப்பூர்வ அரசியல் பிரவேசம்!2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் ஒரு மாதங்களுக்கு முன்பாக ஜனவரி 23-ல் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகப் பிரியங்கா நியமிக்கப்பட்டார். மேலும், அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாகவே 52 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ், உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலியில் மட்டுமே வெற்றிபெற்றது. தங்களின் பாரம்பர்ய தொகுதிகளில் ஒன்றான அமேதியில் ராகுல் அதிர்ச்சியளிக்கும் வகையில் தோல்வியடைந்தார்.பிரியங்கா காந்திபின்னர், மாநிலத்தில் காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்த 2020-ல் முழு மாநிலத்துக்கும் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகப் பிரியங்கா நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, வேளாண் மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் அப்போதைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், விவசாயிகளை கார் ஏற்றி கொன்றதற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியபோது பிரியங்கா கைதுசெய்யப்பட்டு தற்காலிகமாகக் காவலில் வைக்கப்பட்ட நிகழ்வு அவரை ஒரு அரசியல்வாதியாக மக்களிடையே கொண்டுசென்றது.பின்னர், ஆக்ராவில் போலீஸ் கஸ்டடியில் இறந்தவரின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது இரண்டாவது முறையாகப் பிரியங்கா கைதுசெய்யப்பட்டார். இவ்வாறாக, ஒரு அரசியல்வாதியாக மக்களிடத்தில் பரிட்சயமாகிக்கொண்டிருந்த பிரியங்காவுக்கு 2022-ல் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலைக் கவனிக்கும் மிகப்பெரும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தேர்தலில் பிரியங்கா தலைமையில் தனித்து களமிறங்கிய காங்கிரஸ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலன் சார்ந்து வாக்குறுதிகளை முன்வைத்தது.பிரியங்கா காந்திஆனாலும், காங்கிரஸின் முயற்சிக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது. 2 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றது. தோல்விக்குப் பின்னர் மாநிலத்தில் காங்கிரஸின் பலம் குறைந்துவருவதை உணர்ந்த பிரியங்கா, `மக்களிடத்தில் கட்சியை அடிமட்ட அளவில் விரிவுபடுத்தாத வரை தேர்தல் வாக்குறுதிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது' என்று கட்சியினரிடம் கூறினார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது காங்கிரஸின் பொதுச் செயலாளராகப் பிரியங்கா நீடித்தார். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் கட்சி ரீதியாக எந்தப் பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை.மோடிக்கெதிராக சரவெடியாக வெடித்த பிரியங்கா!இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு தொடங்கியதும், இந்த முறையேனும் பிரியங்கா போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். சோனியா காந்தி ராஜ்ய சபா எம்.பி-யாகிவிட்டதாலும், ராகுல் காந்தி ஏற்கெனவே வயநாடு எம்.பி-யாக இருப்பதாலும்
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றிபெற்றார். இதனால், இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய சூழலில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு மக்களவைத் தொகுதியை ராகுல் ராஜினாமா செய்வார் என்று அறிவித்தார்.
அதோடு, வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) போட்டியிடுவார் என்றும் கார்கே அறிவித்தார். இதன்மூலம், சுமார் 20 வருடங்களாகக் காங்கிரஸின் பிரசார முகமாகச் செயல்பட்டுவந்த பிரியங்கா காந்தி முதல்முறையாக நேரடியாக ஒரு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடவிருக்கிறார்.
நேரு குடும்பத்தில் 1972-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி, ராஜிவ் காந்திக்கும் சோனியா காந்திக்கும் இரண்டாவது குழந்தையாக பிரியங்கா காந்தி பிறந்தார். பள்ளி கல்வியைப் பொறுத்தவரை, ராகுலும் பிரியங்காவும் தங்களின் பாட்டி இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சில காலம் வீட்டிலேயே பயின்றனர்.
பின்னர் பள்ளி மேற்படிப்பில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் ஜீசஸ் & மேரி கல்லூரியில் உளவியல் பாடப்பிரிவில் பிரியங்கா இளங்கலை பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து, 2010-ல் புத்த மதக் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இதற்கிடையில், 1997-ல் தொழிலதிபர் ராபர்ட் வதேராவை பிரியங்கா மணந்தார். இந்த தம்பதிக்கு ரைஹான் என்ற மகனும், மிராயா என்ற மகளும் இருக்கின்றனர். தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட இவர்கள் வாக்களித்தனர்.
தங்களின் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் ஆரம்ப காலங்களில் அரசியலிலிருந்து பிரியங்கா ஒதுங்கியே இருந்தார். இருப்பினும், பிரியங்காவின் சிகையலங்காரம், கைத்தறி புடவைகளை அணிவது போன்றவற்றால் அவரின் பாட்டியுடன் அவர் ஒப்பிடப்பட்டார். நேரு குடும்பத்தில் அரசியல் பாரம்பரியத்தின் உண்மையான பிரதிநிதியாகப் பிரியங்கா இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
அரசியலில் பிரியங்கா களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், 2004 நாண்டளுமன்றத் தேர்தலில் நேரு குடும்பத்தின் பாரம்பர்ய தொகுதியான அமேதியில் அவரின் சகோதரர் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், 1999 முதல் 2004 வரை அமேதி எம்.பி-யாக இருந்த அவரின் சோனியா காந்தி, இந்திரா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமரான ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது ரேபரேலி, அமேதி என இரண்டு தொகுதிகளிலும் தன்னுடைய தாய் மற்றும் சகோதரரை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார்.
அந்தத் தேர்தலில் இருவரும் வெற்றியும் பெற்றனர். அதன்பின்னர், 2007-ல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உள்ளூர் தலைவர்களிடம் கலந்துரையாடுவது என களத்தில் இறங்கிய பிரியங்கா, ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிக்குட்பட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கவனித்தார். ஆனால், அந்தத் தேர்தல் காங்கிரஸ் 2002-ல் பெற்ற இடங்களை விடவும் 3 இடங்கள் குறைவாக 22 இடங்களை மட்டுமே வென்றது. அதன்பின்னர், பிரியங்கா பெரும்பாலும் தேர்தல் சமயங்களில் காங்கிரஸின் பாரம்பர்ய தொகுதிகளான ரேபரேலி, அமேதி பிரசாரங்களில் தலைகாட்டி வந்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் ஒரு மாதங்களுக்கு முன்பாக ஜனவரி 23-ல் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகப் பிரியங்கா நியமிக்கப்பட்டார். மேலும், அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாகவே 52 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ், உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலியில் மட்டுமே வெற்றிபெற்றது. தங்களின் பாரம்பர்ய தொகுதிகளில் ஒன்றான அமேதியில் ராகுல் அதிர்ச்சியளிக்கும் வகையில் தோல்வியடைந்தார்.
பின்னர், மாநிலத்தில் காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்த 2020-ல் முழு மாநிலத்துக்கும் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகப் பிரியங்கா நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, வேளாண் மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் அப்போதைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், விவசாயிகளை கார் ஏற்றி கொன்றதற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியபோது பிரியங்கா கைதுசெய்யப்பட்டு தற்காலிகமாகக் காவலில் வைக்கப்பட்ட நிகழ்வு அவரை ஒரு அரசியல்வாதியாக மக்களிடையே கொண்டுசென்றது.
பின்னர், ஆக்ராவில் போலீஸ் கஸ்டடியில் இறந்தவரின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது இரண்டாவது முறையாகப் பிரியங்கா கைதுசெய்யப்பட்டார். இவ்வாறாக, ஒரு அரசியல்வாதியாக மக்களிடத்தில் பரிட்சயமாகிக்கொண்டிருந்த பிரியங்காவுக்கு 2022-ல் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலைக் கவனிக்கும் மிகப்பெரும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தேர்தலில் பிரியங்கா தலைமையில் தனித்து களமிறங்கிய காங்கிரஸ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலன் சார்ந்து வாக்குறுதிகளை முன்வைத்தது.
ஆனாலும், காங்கிரஸின் முயற்சிக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது. 2 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றது. தோல்விக்குப் பின்னர் மாநிலத்தில் காங்கிரஸின் பலம் குறைந்துவருவதை உணர்ந்த பிரியங்கா, `மக்களிடத்தில் கட்சியை அடிமட்ட அளவில் விரிவுபடுத்தாத வரை தேர்தல் வாக்குறுதிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது' என்று கட்சியினரிடம் கூறினார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது காங்கிரஸின் பொதுச் செயலாளராகப் பிரியங்கா நீடித்தார். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் கட்சி ரீதியாக எந்தப் பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை.
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு தொடங்கியதும், இந்த முறையேனும் பிரியங்கா போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். சோனியா காந்தி ராஜ்ய சபா எம்.பி-யாகிவிட்டதாலும், ராகுல் காந்தி ஏற்கெனவே வயநாடு எம்.பி-யாக இருப்பதாலும் ரேபரேலி அல்லது அமேதி என இரண்டில் ஒரு தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால், அவை இரண்டுமே பொய்யாகின. ரேபரேலியில் ராகுலும், அமேதியில் காங்கிரஸின் 40 ஆண்டுகால விசுவாசி கிஷோரி லால் சர்மாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருப்பினும், முழுக்க முழுக்க பா.ஜ.க-வை வீழ்த்தவேண்டும் என உறுதிகொண்டிருந்த பிரியங்கா சளைக்காமல் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓடோடி பிரசாரம் செய்தார்.
`காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துகளைப் பறித்து ஊடுருவல்காரர்களிடம் கொடுத்துவிடுவார்கள். நம் தாய்மார்களின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள்' என மோடி பிரசாரம் மேற்கொண்டபோது பிரியங்கா, `என்னுடைய பாட்டி இந்திரா காந்தி போர் நிதிக்காக தனது மாங்கல்யத்தையே கொடுத்தார். என்னுடைய தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது என் தாய் சோனியா காந்தி இந்த நாட்டுக்காக தன்னையே தியாகம் செய்தார்' என மக்களிடத்தில் உணர்ச்சிபொங்க பிரசாரம் செய்தார். இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றிபெற்றது. அதில், பிரியங்காவின் பிரசாரமும் முக்கிய பங்காற்றியது என்றால் அது மிகையாகாது.
நிச்சயம் வெற்றி பெறுவோம் என இந்தியா கூட்டணியாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், நினைத்தது நடக்கவில்லையென்றாலும், பா.ஜ.க-வை 240 இடங்களோடு மட்டுப்படுத்தி தனிப்பெரும்பான்மை இழக்க வைத்ததே ஒரு வெற்றியாகப் பார்க்கின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெற முடியாமல் தவித்த காங்கிரஸ், 99 இடங்கள் வென்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது.
இப்படியிருக்க, வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்ற ராகுல், எந்த தொகுதியில் எம்.பி பதவியை ராஜினாமா செய்வார் என்று கேள்வியெழுந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரண்டு அறிவிப்புகள் வெளியிட்டார். ஒன்று, வயநாடு எம்.பி பதவியை ராகுல் ராஜினாமா செய்கிறார். மற்றொன்று, வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்.
இதன்மூலம், 20 ஆண்டுகளாக மக்கள் முன்னிலையில் காங்கிரஸின் பிரசார குரலாக ஒலித்துவந்த பிரியங்காவுக்கு, நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வயநாடு மக்களின் ஆசியுடன் நாடாளுமன்றத்துக்குள் முதல்முறையாகப் பிரியங்கா காலடியெடுத்துவைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?