`NDA அரசின் முதல் 15 நாள்களும்... 10 முக்கிய பிரச்னைகளும்!' - சுட்டிக்காட்டும் ராகுல் காந்தி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தற்போது நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இருப்பினும், 2014 முதல் 10 ஆண்டுகள் பாஜக தனிப்பெரும்பான்மை அரசின் பிரதமராகச் செயல்பட்ட மோடி, முதல்முறையாகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.பிரதமர் மோடிபிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்து சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இன்று முதல் கூட்டம் கூடியது. இதில், எம்.பி-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, என்.டி.ஏ அரசின் முதல் 15 நாள்கள் என்று குறிப்பிட்டு 10 முக்கிய பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.இது குறித்து, ராகுல் காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில்...``1. பயங்கர ரயில் விபத்து 2. காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்கள் 3. ரயில் பயணிகளின் அவல நிலை 4. நீட் ஊழல் 5. மருத்துவ முதுகலை படிப்புக்கான நீட் தேர்வு ரத்துராகுல் காந்தி6. UGC - NET தேர்வு வினாத்தாள் கசிவு7. சுங்கக் கட்டண உயர்வு மற்றும் சமையல் எரிவாயு, பால், பருப்பு வகைகளின் விலைவாசி உயர்வு8. தீயில் எரியும் காடுகள்9. தண்ணீர் நெருக்கடி10. வெப்ப அலையின் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் இறப்புகள்'' ஆகியவற்றைப் பட்டியலிட்டு, ``உளவியல் ரீதியிலான பின்னடைவில், மோடி தனது அரசைக் காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்.மோடி (Modi)மோடி மற்றும் அவரது அரசின் அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பலமான எதிர்க்கட்சி தனது அழுத்தத்தைத் தொடரும், மக்களின் குரலை உயர்த்தும், முக்கியமாக எந்தவொரு விஷயத்துக்கும் பிரதமர் பொறுப்புக் கூறாமல் தப்பிக்க அனுமதிக்காது" என்று தெரிவித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88உத்தரப்பிரதேச தலித் அரசியலில், மாயாவதியின் `அரசியல் வாரிசு’ ஆகாஷ் - யார் இவர்?!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தற்போது நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இருப்பினும், 2014 முதல் 10 ஆண்டுகள் பாஜக தனிப்பெரும்பான்மை அரசின் பிரதமராகச் செயல்பட்ட மோடி, முதல்முறையாகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.
பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்து சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இன்று முதல் கூட்டம் கூடியது. இதில், எம்.பி-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, என்.டி.ஏ அரசின் முதல் 15 நாள்கள் என்று குறிப்பிட்டு 10 முக்கிய பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இது குறித்து, ராகுல் காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில்...
``1. பயங்கர ரயில் விபத்து
2. காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்கள்
3. ரயில் பயணிகளின் அவல நிலை
4. நீட் ஊழல்
5. மருத்துவ முதுகலை படிப்புக்கான நீட் தேர்வு ரத்து
6. UGC - NET தேர்வு வினாத்தாள் கசிவு
7. சுங்கக் கட்டண உயர்வு மற்றும் சமையல் எரிவாயு, பால், பருப்பு வகைகளின் விலைவாசி உயர்வு
8. தீயில் எரியும் காடுகள்
9. தண்ணீர் நெருக்கடி
10. வெப்ப அலையின் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் இறப்புகள்'' ஆகியவற்றைப் பட்டியலிட்டு, ``உளவியல் ரீதியிலான பின்னடைவில், மோடி தனது அரசைக் காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்.
மோடி மற்றும் அவரது அரசின் அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பலமான எதிர்க்கட்சி தனது அழுத்தத்தைத் தொடரும், மக்களின் குரலை உயர்த்தும், முக்கியமாக எந்தவொரு விஷயத்துக்கும் பிரதமர் பொறுப்புக் கூறாமல் தப்பிக்க அனுமதிக்காது" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?