Kolkata Case: `99% கோரிக்கைகள் ஏற்பு; இவர்கள் நீக்கப்படுவார்கள்..!' - பேச்சுவார்த்தைக்கு பிறகு மம்தா
கொல்கத்தா டாக்டர் மாணவி கொலைக்கு நீதி கேட்டு நடந்துவரும் டாக்டர்கள் போராட்டத்தில், 4 முறை நடைபெறாமல் போன பேச்சுவார்த்தை நேற்று நடந்துள்ளது. 'பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்' என்ற கோரிக்கை ஏற்கப்படாததால், இதற்கு முன்னால் திட்டமிடப்பட்ட 4 பேச்சுவார்த்தைகளும், நடைபெறாமல் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'இறுதி பேச்சுவார்த்தை அழைப்பு' என்று ஐந்தாவது முறையாக டாக்டர்களுக்கு நேற்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று, கூட்ட நிகழ்வுகளை பதிவு செய்து கையெழுத்து போடப்பட்ட பிரதி வழங்கினால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். இதை ஏற்று டாக்டர்களுடன் 2 ஸ்டெனோகிராபர்கள் வர அனுமதி வழங்கப்பட்டு, பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர்கள் போராட்டம்பேச்சுவார்த்தையில் சுமார் 30 பேர் கொண்ட டாக்டர் குழு கலந்துகொண்டது. இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடத்தப்பட்டது.பேச்சுவார்த்தைக்கு பிறகு மம்தா பானர்ஜி, ``99 சதவிகித டாக்டர் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது" என்று பேசியுள்ளார். பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:ரூ.100 கோடி செலவில் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதி உயர்த்தப்படும். தற்போது மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் மருத்துவ சேவை இயக்குநர் பதவியில் இருப்பவர்கள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு தகுந்த பதவி வழங்கப்படும். இது அவர்களை அவமதிக்க செய்யும் நடவடிக்கை இல்லை. அவர்கள் அந்த பதவியில் இருந்துகொண்டு நீண்ட காலமாக எதுவும் செய்யவில்லை. மேலும் மாணவர்களுக்கு அவர்கள்மீது நம்பிக்கை இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.Mamata Banerjeeகொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். ஆனால் துர்கா பூஜை வரை அவர் அந்த பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இவர் கொலை வழக்கை தவறாக கையாளுகிறார் என்று கூறி, டாக்டர்கள் இவரை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை வைத்து இருந்தனர். தான் பதவி விலகுவதாக வினீத் கோயல் தெரிவித்திருந்தும், தான் தான் அதை அனுமதிக்கவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார். Kolkata Rape Case: தடயங்களை அழிக்க முயற்சி; மருத்துவமனை தலைவர், போலீஸ் அதிகாரி கைது.. நடந்தது என்ன?
கொல்கத்தா டாக்டர் மாணவி கொலைக்கு நீதி கேட்டு நடந்துவரும் டாக்டர்கள் போராட்டத்தில், 4 முறை நடைபெறாமல் போன பேச்சுவார்த்தை நேற்று நடந்துள்ளது.
'பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்' என்ற கோரிக்கை ஏற்கப்படாததால், இதற்கு முன்னால் திட்டமிடப்பட்ட 4 பேச்சுவார்த்தைகளும், நடைபெறாமல் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'இறுதி பேச்சுவார்த்தை அழைப்பு' என்று ஐந்தாவது முறையாக டாக்டர்களுக்கு நேற்று அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று, கூட்ட நிகழ்வுகளை பதிவு செய்து கையெழுத்து போடப்பட்ட பிரதி வழங்கினால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். இதை ஏற்று டாக்டர்களுடன் 2 ஸ்டெனோகிராபர்கள் வர அனுமதி வழங்கப்பட்டு, பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தையில் சுமார் 30 பேர் கொண்ட டாக்டர் குழு கலந்துகொண்டது. இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு மம்தா பானர்ஜி, ``99 சதவிகித டாக்டர் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது" என்று பேசியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:
ரூ.100 கோடி செலவில் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதி உயர்த்தப்படும்.
தற்போது மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் மருத்துவ சேவை இயக்குநர் பதவியில் இருப்பவர்கள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு தகுந்த பதவி வழங்கப்படும். இது அவர்களை அவமதிக்க செய்யும் நடவடிக்கை இல்லை. அவர்கள் அந்த பதவியில் இருந்துகொண்டு நீண்ட காலமாக எதுவும் செய்யவில்லை. மேலும் மாணவர்களுக்கு அவர்கள்மீது நம்பிக்கை இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். ஆனால் துர்கா பூஜை வரை அவர் அந்த பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இவர் கொலை வழக்கை தவறாக கையாளுகிறார் என்று கூறி, டாக்டர்கள் இவரை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை வைத்து இருந்தனர். தான் பதவி விலகுவதாக வினீத் கோயல் தெரிவித்திருந்தும், தான் தான் அதை அனுமதிக்கவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார்.
What's Your Reaction?