ADMK: ``ஓபிஎஸ் 6 மாசம் அமைதியா இருந்தா, எடப்பாடியிடம் அவருக்காக பேசுவோம்'' -ராஜன் செல்லப்பா பேச்சு

ஓபிஎஸ் யை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஒரு 6 மாதத்திற்கு அவர் அமைதியாக இருக்க வேண்டுமென அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்.ராஜன் செல்லப்பா``பஞ்சமி நிலத்தை என் பெயரில் பட்டா போடவில்லை..'' -தேனியில் ஓபிஎஸ் பேட்டிசமீபத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.'கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு உரிமையில்லை.' என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ், 'எப்படியானாலும் தர்மமே வெல்லும். நான், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இணைய எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.' என்று பேசியிருந்தார். ராஜன் செல்லப்பாஇதனைத் தொடர்ந்தே இன்று மதுரை மேலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜன் செல்லப்பா, ''அதிமுக வளர வேண்டுமமென்றால் ஓபிஎஸ் போன்ற யாருமே நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது. ஒரு ஆறு மாதத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும். அப்படி அமைதியாக இருந்தால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியிடம் சென்று அவருக்காக பேசுவோம்.' எனக் கூறியிருக்கிறார்.`ஓபிஎஸ்-ஸை எக்காலத்திலும் அதிமுக-வில் இணைக்கப் போவதில்லை!' - ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

Feb 14, 2025 - 18:39
 0  3
ADMK: ``ஓபிஎஸ் 6 மாசம் அமைதியா இருந்தா, எடப்பாடியிடம் அவருக்காக பேசுவோம்'' -ராஜன் செல்லப்பா பேச்சு
ஓபிஎஸ் யை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஒரு 6 மாதத்திற்கு அவர் அமைதியாக இருக்க வேண்டுமென அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்.
ராஜன் செல்லப்பா

சமீபத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

'கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு உரிமையில்லை.' என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ், 'எப்படியானாலும் தர்மமே வெல்லும். நான், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இணைய எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.' என்று பேசியிருந்தார்.

 ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

இதனைத் தொடர்ந்தே இன்று மதுரை மேலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜன் செல்லப்பா, ''அதிமுக வளர வேண்டுமமென்றால் ஓபிஎஸ் போன்ற யாருமே நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது. ஒரு ஆறு மாதத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும். அப்படி அமைதியாக இருந்தால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியிடம் சென்று அவருக்காக பேசுவோம்.' எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist