“3 வாரங்கள் மன அழுத்தத்தில் இருந்தேன்” - ‘லால் சிங் சத்தா’ தோல்வி குறித்து ஆமிர் கான்

என் படம் தோல்வியடையும்போது, நான் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மன அழுத்தத்துக்குள் சென்று விடுவேன்.

Feb 25, 2025 - 15:19
 0  1
“3 வாரங்கள் மன அழுத்தத்தில் இருந்தேன்” - ‘லால் சிங் சத்தா’ தோல்வி குறித்து ஆமிர் கான்

மும்பை: என் படம் தோல்வியடையும்போது, நான் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மன அழுத்தத்துக்குள் சென்று விடுவேன். அதன் பிறகு நான் என்னுடைய குழுவினருடன் அமர்ந்து என்ன தவறு நடந்தது என்று விவாதித்து அதிலிருந்து கற்றுக் கொள்வேன் என்று நடிகர் ஆமிர் கான் தெரிவித்தார்.

இதுகுறித்து தனியார் ஊடக நிகழ்வு ஒன்றில் பேசிய ஆமிர்கான், “என்னுடைய படங்கள் தோல்வி அடைந்தால் நான் வருத்தம் அடைவேன். காரணம் ஒரு படத்தை எடுப்பது கடினமானது. சில நேரம் நாம் திட்டமிட்டது போல் எதுவும் நடப்பதில்லை. ‘லால் சிங் சத்தா’ படத்தில் என்னுடைய நடிப்பு சற்று மிகையாக இருந்தது. அந்த படம் முழுக்க ஹீரோவின் நடிப்பை சார்ந்த ஒரு படம். டாம் ஹாங்க்ஸின் ‘ஃபார்ரஸ்ட் கம்ப்’ படத்தை போல அது வரவேற்பை பெறவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist