3-வது முறையாக கொல்கத்தா சாம்பியன்: ஐபிஎல் இறுதியில் வீழ்ந்த ஹைதராபாத் ‘மோசமான’ சாதனை!
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்கத்திலேயே பந்துகள் நன்கு ஸ்விங் ஆகின. அதேவேளையில் சீரான பவுன்ஸும் இருந்தது. மேலும் பந்தை இறுகப்பிடித்து வீசமுடிந்ததால் சரியான திசையில் பந்துகளை வீசி கொல்கத்தா அணி வீரர்கள் அழுத்தம் கொடுத்தனர்.
What's Your Reaction?