வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். 14, 15-ம் தேதிகளில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென் தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை தொடங்கவில்லை.
What's Your Reaction?