ரூ.1.1 கோடியை 4 வாரத்தில் டெபாசிட் செய்ய ‘கோச்சடையான்’ பட தயாரிப்பாளருக்கு உத்தரவு 

காசோலை மோசடி வழக்கில் ரூ.1 கோடியே 1 லட்சத்தை 4 வார காலக்கெடுவில் அல்லிக்குளத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டுமென ‘கோச்சடையான்’ படத் தயாரிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Aug 2, 2024 - 10:15
 0  5
ரூ.1.1 கோடியை 4 வாரத்தில் டெபாசிட் செய்ய ‘கோச்சடையான்’ பட தயாரிப்பாளருக்கு உத்தரவு 

சென்னை: காசோலை மோசடி வழக்கில் ரூ.1 கோடியே 1 லட்சத்தை 4 வார காலக்கெடுவில் அல்லிக்குளத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டுமென ‘கோச்சடையான்’ படத் தயாரிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத்தை மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தயாரிப்பு பணிகளுக்காக ஆட் பியூரோ அட்வர்டைசிங் என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.10 கோடியை மீடியா ஒன் நிறுவனம் கடனாக வாங்கியிருந்தது. மேலும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையுடன், தமிழகத்தில் வசூலாகும் தொகையில் 20 சதவீதத்தை ஆட்பீரோ நிறுவனத்துக்கு வழங்குவதாகவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist