ருதுராஜ் அதிரடி சதம், துபே 7 சிக்சர்கள்! - லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கே 210 ரன்கள் குவிப்பு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸூக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்களைச் சேர்த்துள்ளது

Apr 24, 2024 - 18:05
 0  40
ருதுராஜ் அதிரடி சதம், துபே 7 சிக்சர்கள்! - லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கே 210 ரன்கள் குவிப்பு

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தினார். மறுபுறம் ஷிவம் துபே 7 சிக்சர்களை விளாசினார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனராக களம்கண்ட அஜிங்க்யா ரஹானே, மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் 1 ரன்னுக்கு அவுட்டாகி கிளம்பினார். ரஹானே நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி மொத்தம் 120 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அடுத்து களத்துக்கு வந்த டேரில் மிட்செல் 11 ரன்களில் விக்கெட்டானார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist