“மரண பயம்... அழுகுரல்...” - இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பும் லெபனான் மக்களின் அனுபவம்
லெபனான் மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர். ஒருவித மரண பயம், பதற்றம் மற்றும் வீட்டை விட்டு வெளியேறும் ஏக்கம் அனைத்தையும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர். இது ஒரு `கொடிய போர்’ என இதனை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெருசலேம்: லெபனான் மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர். ஒருவித மரண பயம், பதற்றம் மற்றும் வீட்டை விட்டு வெளியேறும் ஏக்கம் என அனைத்தையும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர். இது ஒரு `கொடிய போர்’ என இதனை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காசா மீது கண்மூடித்தனமாக போர் தொடுத்ததை போல தற்போது ஹிஸ்புல்லாவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது இஸ்ரேல். போர்ப் பதற்றம் மென்மேலும் வலுத்துள்ளதால், தெற்கு லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர். இந்தச் சூழலில் லெபனான் முழுவதும் இஸ்ரேலின் தாக்குதலில் 50 குழந்தைகள் உட்பட 569 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் இன்று மாலை தெரிவித்தது.
What's Your Reaction?