புதுச்சேரியில் 3 நாள் சர்வதேச பட விழா - ‘பாரடைஸ்’ உள்ளிட்ட படங்களை இலவசமாக பார்க்கலாம்!

புதுச்சேரியில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்

Aug 2, 2024 - 10:15
 0  5
புதுச்சேரியில் 3 நாள் சர்வதேச பட விழா - ‘பாரடைஸ்’ உள்ளிட்ட படங்களை இலவசமாக பார்க்கலாம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம். சர்வதேச புகழ்பெற்ற பிரசன்ன விதனகே திரைப்பட உருவாக்கத்துக்கான சிறப்பு வகுப்பையும் நடத்துகிறார்.

இது தொடர்பாக புதுச்சேரி திரை இயக்கம் செயலர் ரவி சந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க திரை இயக்க நிர்வாகி ராமச் சந்திரன் ஆகியோர் இன்று கூறியது: "புதுச்சேரியில் அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நாளை மாலை சர்வதேசத் திரைப்பட விழா 2024 துவங்குகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்நிகழ்வில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும். இவற்றை இலவசமாக பார்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist