`நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வின் மோசமான தோல்விக்குக் காரணம் என்ன?' - விகடன் கருத்துக்கணிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 இடங்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. இதில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க 7 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது. 24 இடங்களில் மட்டுமே இரண்டாம் பிடித்திருக்கிறது.எடப்பாடி பழனிசாமிஇந்த நிலையில், 2019, 2024 என இரண்டு மக்களவைத் தேர்தலிலும் சேர்த்து மொத்தமாகவே ஒரேயொரு இடத்தை மட்டுமே அ.தி.மு.க வென்றிருக்கிறது. இப்படியிருக்க, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இப்படி படுதோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.விகடன் கருத்துக்கணிப்புஅதில், `மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சந்தித்திருக்கும் மோசமான தோல்விக்கு காரணம் என்ன?' என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `உட்கட்சி பிரச்னை, கூட்டணி சரியில்லை, வேட்பாளர் தேர்வு, ஆளும் கூட்டணியின் வலிமை' என நான்கு விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் அதிகபட்சமாக 48 சதவிகிதம் பேர் அ.தி.மு.க-வின் மோசமான தோல்விக்கு உட்கட்சி பிரச்னையே காரணம் என்று தெரிவித்திருக்கின்றனர்.விகடன் கருத்துக்கணிப்புஅதற்கடுத்தபடியாக, 28 சதவிகிதம் பேர் கூட்டணி சரியில்லை என்றும், 19 சதவிகிதம் பேர் ஆளும் கூட்டணியின் வலிமை என்றும், 5 சதவிகிதம் பேர் வேட்பாளர் தேர்வு என்றும் தெரிவித்திருக்கின்றனர்.விகடன் கருத்துக்கணிப்புஇன்னும் எத்தனை காலம்தான் பிறரைச் சார்ந்திருப்பது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று கூறிய நிலையில், ஒருவேளை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினையைத் தரும் என்பது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்... https://www.vikatan.com/தொடர் சொதப்பலில் எடப்பாடி... ‘ஆளுக்காளு நாட்டாமை’ - வீழும் அ.தி.மு.க!

Jun 13, 2024 - 11:47
 0  5
`நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வின் மோசமான தோல்விக்குக் காரணம் என்ன?' - விகடன் கருத்துக்கணிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 இடங்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. இதில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க 7 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது. 24 இடங்களில் மட்டுமே இரண்டாம் பிடித்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், 2019, 2024 என இரண்டு மக்களவைத் தேர்தலிலும் சேர்த்து மொத்தமாகவே ஒரேயொரு இடத்தை மட்டுமே அ.தி.மு.க வென்றிருக்கிறது. இப்படியிருக்க, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இப்படி படுதோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு

அதில், `மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சந்தித்திருக்கும் மோசமான தோல்விக்கு காரணம் என்ன?' என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `உட்கட்சி பிரச்னை, கூட்டணி சரியில்லை, வேட்பாளர் தேர்வு, ஆளும் கூட்டணியின் வலிமை' என நான்கு விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் அதிகபட்சமாக 48 சதவிகிதம் பேர் அ.தி.மு.க-வின் மோசமான தோல்விக்கு உட்கட்சி பிரச்னையே காரணம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

விகடன் கருத்துக்கணிப்பு

அதற்கடுத்தபடியாக, 28 சதவிகிதம் பேர் கூட்டணி சரியில்லை என்றும், 19 சதவிகிதம் பேர் ஆளும் கூட்டணியின் வலிமை என்றும், 5 சதவிகிதம் பேர் வேட்பாளர் தேர்வு என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

விகடன் கருத்துக்கணிப்பு

இன்னும் எத்தனை காலம்தான் பிறரைச் சார்ந்திருப்பது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று கூறிய நிலையில், ஒருவேளை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினையைத் தரும் என்பது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்... https://www.vikatan.com/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist