திருப்பூர், கோவை விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி போராட்டம் - கூலி ஒப்பந்த பேச்சில் சுணக்கம்

கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சுணக்கம் காட்டும் நிலையில், விசைத்தறியாளர்கள் சார்பில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

Feb 14, 2025 - 18:38
 0  3
திருப்பூர், கோவை விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி போராட்டம் - கூலி ஒப்பந்த பேச்சில் சுணக்கம்

திருப்பூர்: கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சுணக்கம் காட்டும் நிலையில், விசைத்தறியாளர்கள் சார்பில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியிலிருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்கவும், இனி ஒப்பந்த கூலியைக் குறைக்காமல் வழங்கும் வகையில் சட்டப் பாதுகாப்புடன் அமல்படுத்த வேண்டியும், கடந்த ஓராண்டாக நீடித்துவரும் குறைக்கப்பட்ட மற்றும் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கேற்ப புதிய கூலி உயர்வு கோரிக்கைகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசித் தீர்வுகாணும் பொருட்டு, மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நல ஆணையமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தொடர்ந்து, விசைத்தறியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist