டி.ஆர்.பாலுவிடம் 2 மணி நேரம் விசாரணை: அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் சரமாரி கேள்வி
‘டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தன் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை: அவதூறு வழக்கில் திமுக எம்பி டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை தரப்பில் 2 மணி நேரத்துக்கும் மேலாக குறுக்கு விசாரணை நடந்தது. ‘டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தன் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நடுவர் செந்தில்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆர்.பாலுவும், அண்ணாமலையும் ஆஜராகியிருந்தனர். மனுதாரரான டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் குறுக்கு விசாரணை நடத்தினார்.
What's Your Reaction?







