ஜீவாவின் ‘பிளாக்’ ட்ரெய்லர் எப்படி? - மர்மமும் விறுவிறுப்பும்!

ஜீவா நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Sep 26, 2024 - 09:48
 0  10
ஜீவாவின் ‘பிளாக்’ ட்ரெய்லர் எப்படி? - மர்மமும் விறுவிறுப்பும்!

சென்னை: ஜீவா நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? - ஒரு வீடு, இரண்டு கதாபாத்திரங்கள் என்றே பெரும்பாலான ட்ரெய்லர் காட்சிகள் நகர்கின்றன. தொடக்கத்திலேயே ஒருவித பதற்றத்துடன் இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். தொடர்ந்து சில ஜாலியான காட்சிகள் வந்து செல்ல மீண்டும், ஹாரர் ஜானருக்குள் காட்சிகள் களம் புகுகின்றன. ஜீவா - பிரியா பவானி ஷங்கர் செல்லும் புதிய அபார்ட்மென்ட்டில் நிகழும் சம்பவங்கள் தான் படமாக இருக்கும் என தெரிகிறது.

திகிலூட்டும் காட்சிகள் ஒருவித விறுவிறுப்பை கூட்டுகின்றன. மர்மமான சம்பவங்களும், அதையொட்டிய நிகழ்வுகளும், சுவாரஸ்மாகவே நகர்கின்றன. ட்ரெய்லர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist