சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் சாலைக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்

தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு சிலதினங்களுக்கு முன், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன்எஸ்.பி.பி. சரண் வந்தார்.

Sep 26, 2024 - 09:49
 0  4
சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் சாலைக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்

சென்னை: திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னைநுங்கம்பாக்கம் காம்தார் நகர்பிரதான சாலைக்கு, ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயர்சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் அறிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு சிலதினங்களுக்கு முன், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன்எஸ்.பி.பி. சரண் வந்தார். அப்போது அவர், தங்கள் இல்லம் அமைந்துள்ள தெருவுக்கோ அல்லது நகருக்கோ தனது தந்தை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரை சூட்ட வேண்டும் என்று மனு அளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist